Inandoutcinema - Tamil cinema news

பார்வையற்ற பெண்ணாக நடிக்கும் சிம்பு பட நடிகை. விவரம் உள்ளே

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சிம்பு ஜோடியாக போடா போடி படத்தில் ஹீரோயினாக அறிமுகமானவர்தான் நடிகை வரலட்சுமி சரத்குமார் ஆகும். நான்கு வருட இடைவெளி விட்டு தாரை தப்பட்டை படத்தில் ஹீரோயினாக நடித்தார். ஹீரோயின் மட்டுமின்றி, முக்கிய வேடங்களிலும் நடிக்கத் தொடங்கினார் வரலட்சுமி. அதன் பின்னர் அவருக்கு வாய்ப்புகள் குவிய தொடங்கியது. விக்ரம் வேதா, நிபுணன், சத்யா ஆகிய படங்களில் முக்கிய வேடங்களில் நடித்தார்.

விஷாலின் சண்டக்கோழி 2, கவுதம் கார்த்திக்கின் மிஸ்டர் சந்திரமெளலி, ஜெய்யின் நீயா 2, விஜய்யின் சர்கார், எச்சரிக்கை இது மனிதர்கள் நடமாடும் இடம், வெல்வெட் நகரம் ஆகிய படங்கள் தற்போது வரலட்சுமி கைவசம் உள்ளன. இதுதவிர, விமல் ஜோடியாக ‘கன்னி ராசி’ படத்திலும் நடித்துள்ளார். இந்நிலையில், ஜேகே இயக்கும் புதிய படம் ஒன்றில் ஒப்பந்தமாகியுள்ளார் நடிகை வரலட்சுமி. இந்தப் படத்தில், பார்வையற்ற மாற்றுத்திறனாளி வேடத்தில் அவர் நடிக்கிறார். சாய் சமரத் மூவிஸ் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு, சாம் சி.எஸ். இசையமைக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Previous «
Next »

In&out Cinema is a Indian digital media company based in Chennai, Tamilnadu. Founded by Francis Markus.B in 2016. In&out Cinema Provides verity of news, videos, reviews, exclusive interviews. on cinema, politics, culture, business, tech. sports around the world in Indian regional language Tamil. We are available in Face Book, Twitter, Instagram, Youtube, Google +, Pinterest and other social media platform.
  • facebook
  • twitter
  • googleplus
  • youtube
  • instagram
  • pinterest
Inandoutcinema Scrolling cinema news