நிகழ்ச்சி தொகுப்பளராக உருவெடுத்த சர்க்கார் பட நடிகை – விவரம் உள்ளே

நடிகரும், பத்திரிக்கையாளரும் மற்றும் அரசியல்வாதியுமான சரத்குமாருக்கும் அவரது முதல் மனைவியான சாயாவிற்கும் பிறந்த மகள்தான் நடிகை வரலட்சுமி ஆகும். வரலட்சுமி சரத்குமார் சிலம்பரசனுடன் இணைந்து நடித்த போடா போடி திரைப்படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார்.

சமீபத்தில் சார்ஜுன் இயக்கத்தில், இவரது நடிப்பில் வெளியான எச்சரிக்கை இது மனிதர்கள் நடமாடும் இடம் என்ற திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. நடிகை வரலக்ஷ்மி சரத்குமாரின் நடிப்பு பலராலும் பாராட்டப்பட்டது.

எச்சரிக்கை இது மனிதர்கள் நடமாடும் இடம் படத்திற்கு பிறகு நடிகை வரலக்ஷ்மி சரத்குமார் கைவசம் விமலின் கன்னி ராசி, பிரியதர்ஷினியின் சக்தி, வினய்யின் அம்மாயி, விஷாலின் சண்டக்கோழி 2, தனுஷின் மாரி 2, விஜய்யின் சர்கார், ஜெய்யின் நீயா 2, சரத்குமாரின் பாம்பன், மனோஜ்குமார் நடராஜனின் வெல்வெட் நகரம், வைபவ்வின் காட்டேரி, JK-வின் ராஜபார்வை என அடுத்தடுத்து படங்கள் வரிசை கட்டி நிற்கிறது.

இதில் சண்டக்கோழி 2 அக்டோபர் 18-ஆம் தேதியும், சர்கார் வருகிற தீபாவளிக்கும் ரிலீஸாகவுள்ளது. இவ்விரண்டு படங்களிலுமே வரலக்ஷ்மி சரத்குமார் எதிர்மறையான வேடத்தில் நடித்துள்ளதாக கூறப்படுகிறது. இன்னிலையில், உன்னை அறிந்தால் என்ற புதிய நிகழ்ச்சியை, நடிகை வரலக்ஷ்மி தொகுத்து வழங்கவிருப்பதாக தகவல் வெளியானது.

தற்போது அதை உறுதிப்படுத்தும் வகையில் ஜெயாடிவி ஒரு காணொளி ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த நிகழ்ச்சி இம்மாதம் 14 தேதி துவங்கவிருக்கிறது. வரும் ஞாயிறு மதியம் 12 மணிக்கு இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

Previous «
Next »

In&out Cinema is a Indian digital media company based in Chennai, Tamilnadu. Founded by Francis Markus.B in 2016. In&out Cinema Provides verity of news, videos, reviews, exclusive interviews. on cinema, politics, culture, business, tech. sports around the world in Indian regional language Tamil. We are available in Face Book, Twitter, Instagram, Youtube, Google +, Pinterest and other social media platform.
  • facebook
  • twitter
  • googleplus
  • youtube
  • instagram
  • pinterest
Inandoutcinema Scrolling cinema news