Inandoutcinema - Tamil cinema news

சர்க்கார் விஜயின் புகைப்படத்தை வெளியிட்ட வரலக்ஷ்மி. புகைப்படம் உள்ளே

நடிகர் விஜய் எ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் உருவாகும் சர்கார் படத்தில் நடித்துவருகிறார். கத்தி துப்பாக்கி படத்தை தொடர்ந்து விஜய் மூன்றாவது முறையாக முருகதாஸ் இயக்கத்தில் நடித்துவருவது குறிப்பிடத்தக்கது. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்துவருகிறார். படத்தை வருகிற தீபாவளிக்கு ரிலீஸ் செய்ய இரவு பகலாக வேலை செய்துவருகிறார் இயக்குனர் முருகதாஸ்.

சமீபத்தில் நடிகர் விஜய் மற்றும் ஏ.ஆர் முருகதாஸ் மற்றும் தயாரிப்பு நிறுவனமான சன்பிக்சர்ஸூக்கு பொதுசுகாதாரத்துறை எச்சரிக்கை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. பின்னர் அந்த புகைப்படத்தை படக்குழு நீக்கியது. நேற்று சர்கார் படத்தின் சர்ச்சசைக்குரிய புகைப்படத்தை விளம்பரப்படுத்தியதற்கு ரூ.10 கோடியை அரசுப் புற்று நோய் மருத்துவ மையத்துக்கு இழப்பீடாக வழங்கக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த மனு மீதான விசாரணை இன்று நடைபெற்றது.

அப்போது, இந்த வழக்கு தொடர்பாக நடிகர் விஜய், இயக்குநர் முருகதாஸ், தயாரிப்பு நீருவனம், மத்திய, மாநில அரசுகள் 2 வாரத்தில் பதிலளிக்க சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் நடிகை வரலக்ஷ்மி தனது ட்விட்டர் பக்கத்தில் நடிகர் விஜயின் புகைப்படத்தை பதிவேற்றி, இந்த புகைப்படத்தை வெளியிட இறுதியாக எனக்கு அனுமதி கிடைத்துவிட்டது என பதிவிட்டுள்ளார். அந்த புகைப்படம் மேலே கொடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Previous «
Next »

In&out Cinema is a Indian digital media company based in Chennai, Tamilnadu. Founded by Francis Markus.B in 2016. In&out Cinema Provides verity of news, videos, reviews, exclusive interviews. on cinema, politics, culture, business, tech. sports around the world in Indian regional language Tamil. We are available in Face Book, Twitter, Instagram, Youtube, Google +, Pinterest and other social media platform.
  • facebook
  • twitter
  • googleplus
  • youtube
  • instagram
  • pinterest
Inandoutcinema Scrolling cinema news