Inandoutcinema - Tamil cinema news

கீர்த்தி சுரேஷ், ரன்பீர் கபூர் பாணியில் நடிகை திரிஷா. விவரம் உள்ளே

பழம்பெரும் நடிகை சாவித்திரி வாழ்க்கையை மையமாக வைத்து சமீபத்தில் தமிழில் நடிகையர் திலகம் தெலுங்கில் மகாநதி என்ற பெயர்களில் வெளியான படம் பெரிய வெற்றி பெற்றது. அதை தொடர்ந்து இந்தி நடிகர் சஞ்சைய்தத் வாழ்க்கையை மையமாக வைத்து சஞ்சு என்ற பெயரில் திரைக்கு வந்து ஓடிக்கொண்டிருக்கும் படமும் ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்று ரூ.500 கோடிக்கு மேல் வசூல் சாதனை நிகழ்த்தியது.

இன்னிலையில் மறைந்த தமிழக முதல்–அமைச்சர் ஜெயலலிதா வாழ்க்கையையும் படமாக்கும் முயற்சிகள் நடந்து வருகிறது. இந்த படத்தில் ஜெயலலிதா வேடத்தில் நடிக்க திரிஷா விருப்பம் தெரிவித்து உள்ளார். ஜெயலலிதா மறைந்தபோது நேரில் சென்று அவரது உடலுக்கு திரிஷா அஞ்சலி செலுத்தி விட்டு வந்தார்.

ஜெயலலிதா கையால் விருது வாங்கிய படத்தை தனது டுவிட்டர் முகப்பு படமாகவும் வைத்து இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இது குறித்து நடிகை திரிஷா கூறியதாவது : சிறுவயதில் இருந்தே எனக்கு ஜெயலலிதாவை பிடிக்கும். ஜெயலலிதா வாழ்க்கையை சினிமா படமாக எடுத்தால் அவரது கதாபாத்திரத்தில் நடிக்க தயாராக இருக்கிறேன் என நடிகை திரிஷா கூறியுள்ளார்.

Previous «
Next »

In&out Cinema is a Indian digital media company based in Chennai, Tamilnadu. Founded by Francis Markus.B in 2016. In&out Cinema Provides verity of news, videos, reviews, exclusive interviews. on cinema, politics, culture, business, tech. sports around the world in Indian regional language Tamil. We are available in Face Book, Twitter, Instagram, Youtube, Google +, Pinterest and other social media platform.
  • facebook
  • twitter
  • googleplus
  • youtube
  • instagram
  • pinterest
Inandoutcinema Scrolling cinema news