September 19, 2018
Inandoutcinema - Tamil cinema news

கலைஞருக்கு அஞ்சலி செலுத்திய நடிகை திரிஷா. இணையத்தில் வைரலாகும் புகைப்படம்

திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும் முன்னாள் தமிழக முதல்வருமான கலைஞர் கருணாநிதி கடந்த சில நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் காவேரி மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

மருத்துவர்கள் எவ்வளவோ முயற்சி செய்தும் திமுக தலைவர் கருணாநிதி நேற்று முன்தினம் (7-ம் தேதி) மாலை 6.10 மணியளவில் சிகிச்சை பலனின்றி அகால மரணமடைந்தார். அதை தொடர்ந்து நேற்று மாலை அவரின் உடல் முழு அரசு மரியாதையுடன், மெரினாவில் உள்ள அண்ணா நினைவிடம் அருகே நல்லடக்கம் செய்யப்பட்டது.

மெரினாவில் திமுக தலைவர் கருணாநிதியின் நினைவிடத்தில், திமுக தொண்டர்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் தொடர்ந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இன்று காலை திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், ஆ.ராசா, கே.என்.நேரு, மா.சுப்பிரமணியம், எ.வ.வேலு உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள், கருணாநிதி நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினர்.

இந்த நிலையில், தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவரான நடிகை திரிஷா, மெரினாவில் உள்ள கலைஞர் கருணாநிதி நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார். அவர் அஞ்சலி செலுத்தும் புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாக பரவி வருவது குறிப்பிடத்தக்கது.

Previous «
Next »

In&out Cinema is a Indian digital media company based in Chennai, Tamilnadu. Founded by Francis Markus.B in 2016. In&out Cinema Provides verity of news, videos, reviews, exclusive interviews. on cinema, politics, culture, business, tech. sports around the world in Indian regional language Tamil. We are available in Face Book, Twitter, Instagram, Youtube, Google +, Pinterest and other social media platform.
  • facebook
  • twitter
  • googleplus
  • youtube
  • instagram
  • pinterest
Inandoutcinema Scrolling cinema news