September 24, 2018
Inandoutcinema - Tamil cinema news

ரஜினி – கார்த்திக் சுப்ராஜ் படத்தில் இணைந்த நடிகை திரிஷா ? விவரம் உள்ளே

பா.ரஞ்சித் இயக்கத்தில் வெளிவந்த காலா படத்திற்கு பிறகு கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகும் பெயரிடப்படாத படத்தில் ரஜினிகாந்த் நடித்துவருகிறார். இந்த படம் இமயமலையை சுற்றியே பெரும்பகுதி படப்பிடிப்பையும் நடத்த உள்ளனர். இந்திய-பாகிஸ்தான் எல்லையிலும் படப்பிடிப்பு நடக்க இருப்பதாக கூறப்படுகிறது.

அங்குள்ள ஒரு கல்லூரியிலும் முக்கிய காட்சிகளை படமாக்கினர். ரஜினிகாந்த் கல்லூரி விடுதி வார்டனாக நடிப்பதாக கூறப்படுகிறது. அதிரடி காட்சிகள், நகைச்சுவை நிறைந்த ஜனரஞ்சகமான படமாக இந்த படம் இருக்கும் என கூறப்படுகிறது. சென்னை, மதுரை போன்ற இடங்களில் படப்பிடிப்பு நடத்த திட்டமிட்டு உள்ளனர்.

இதில் சிம்ரன் கதாநாயகியாக நடிக்கிறார். விஜய் சேதுபதி, பாபிசிம்ஹாவும் நடிக்கின்றனர். விஜய்சேதுபதி வில்லன் வேடம் ஏற்றிருக்கிறார். இந்த படத்தில் இன்னொரு கதாநாயகியும் இருக்கிறார் என்றும் அந்த கதாபாத்திரத்தில் திரிஷா நடிக்கிறார் என்றும் கூறப்படுகிறது.

படத்தில் திரிஷா இருப்பதை படக்குழுவினர் ரகசியமாக வைத்துள்ளனர். திரிஷா இதுவரை ரஜினியுடன் நடிக்கவில்லை. அவருடன் நடிக்க ஆர்வம் உள்ளது என்று அடிக்கடி கூறி வந்தார். அதனால் இந்த படத்தில் கார்த்திக் சுப்ராஜ் நடிகை த்ரிஷாவை ஒப்பந்தம் செய்திருப்பதாக கூறப்படுகிறது.

Previous «
Next »

In&out Cinema is a Indian digital media company based in Chennai, Tamilnadu. Founded by Francis Markus.B in 2016. In&out Cinema Provides verity of news, videos, reviews, exclusive interviews. on cinema, politics, culture, business, tech. sports around the world in Indian regional language Tamil. We are available in Face Book, Twitter, Instagram, Youtube, Google +, Pinterest and other social media platform.
  • facebook
  • twitter
  • googleplus
  • youtube
  • instagram
  • pinterest
Inandoutcinema Scrolling cinema news