September 23, 2018
Inandoutcinema - Tamil cinema news

சிவகார்த்திகேயன் படத்தால் சமந்தாவிற்கு வந்த புது பிரச்சனை – விவரம் உள்ளே

ஷரத்தா ஸ்ரீ நாத் நடிப்பில் 2016 – ம் ஆண்டு கன்னட மொழியில் யு-டர்ன் படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தை லூசியா பட இயக்குநர் பவன்குமார் இயக்கியிருந்தார். ஒரு மேம்பாலத்தில் விதிமுறை மீறி யு-டர்ன் எடுப்பவர்கள் இறந்து போகிறார்கள். அதற்கு பின்னால் இருக்கும் மர்மத்தைப் பற்றியதே இந்தப் படத்தின் கதை.

கடந்த வருடம் இதே படம் மலையாளத்தில் கேர்ஃபுல் என்ற பெயரில் வெளியானது. தற்போது தமிழ் மற்றும், தெலுங்கில் மொழிமாற்றம் செய்யப்பட்டு உருவாகியுள்ளது. அதிக வசூலை குவித்த இந்தப் படத்தை இந்தியிலும் இயக்க உள்ளார் இயக்குநர் பவன் குமார்.

இந்த படத்தின் தமிழ் மற்றும் தெலுங்கு பதிப்பில் சமந்தா, ஆதி, ராகுல் ரவிந்திரன், பூமிகா சாவ்லா, நரைன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். யு டர்ன் படம் அறிவிக்க பட்ட நாளில் இருந்தே இந்த படத்தில் சமந்தாவின் பங்களிப்பு மிக பெரிதாக இருக்கும் என்பதே எல்லோரின் எதிர்பார்ப்பாக இருக்கிறது. சமீபத்தில் யு-டர்ன் படத்தின் ட்ரெய்லரை இசையமைப்பாளர் அனிருத் வெளியிட்டிருந்தார்.

இந்த ட்ரைலரின் தெலுங்கு பதிப்பு நான்கு மில்லியனுக்கும் அதிகமானோரையும், தமிழ் பதிப்பை 2 மில்லியனுக்கும் அதிகமானோரும் பார்த்துள்ளது குரிப்பிடத்தக்கது. இத்திரைப்படம் செப்டம்பர் 13-ம் தேதி திரைக்கு வரும் என்று படக்குழுவினர் அறிவித்துள்ளனர். இதே நாளில் பொன்ராம் இயக்கத்தில் சிவகத்த்திகேயன் – சமந்தா நடிப்பில் உருவாகும் சீமராஜா படமும் வெளியாகவிருக்கிறது.

இதனால் இரு படத்தின் வசூல் பாதிக்கப்படும் என கருதி யு-டர்ன் படம் தள்ளி போவதாக கூறப்படுகிறது. ஆனால் படக்குழு இது பற்றிய எந்த தகவலும் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. விரைவில் இந்த படத்தை பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Previous «
Next »

In&out Cinema is a Indian digital media company based in Chennai, Tamilnadu. Founded by Francis Markus.B in 2016. In&out Cinema Provides verity of news, videos, reviews, exclusive interviews. on cinema, politics, culture, business, tech. sports around the world in Indian regional language Tamil. We are available in Face Book, Twitter, Instagram, Youtube, Google +, Pinterest and other social media platform.
  • facebook
  • twitter
  • googleplus
  • youtube
  • instagram
  • pinterest
Inandoutcinema Scrolling cinema news