September 24, 2018
Inandoutcinema - Tamil cinema news

இவர்களுக்காக மனம் வருந்திய நடிகை சாய் பல்லவி – விவரம் உள்ளே

கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கடுமையான மழை வெள்ளத்தால் கேரளா பாதிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து கனமழை கொட்டி தீர்த்து வருவதால், கேரள மாநிலமே வெள்ளத்தில் மிதக்கிறது. மழை தொடர்பான சம்பவங்களில் சிக்கி 73 பேர் இதுவரை பலியாகி இருக்கின்றனர்.

கேரளாவில் பெய்து வரும் கனமழைக்கு உதவிக்கரம் நீட்டுமாறு கேரள திரைப்பிரபலங்கள் டுவிட்டர் மூலமாக நாட்டு மக்களுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். கேரள முதல் மந்திரி நிவாரண நிதிக்கு மக்கள் தங்களால் இயன்ற பங்களிப்பை அளிக்க வேண்டும் என்று நிவின் பாலி உள்ளிட்ட திரைநட்சத்திரங்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

இதற்காக நடிகர் சூர்யா, கார்த்தி உள்ளிட்ட தமிழ் திரைபிரபலங்கள் பலர் நன்கொடையாக லட்சக்கணக்கான தொகையை கேரளமக்களுக்கு வழங்கிவருகின்றனர். இன்னிலையில், பிரேமம் என்ற மலையாள படம் மூலம் பிரபலமடைந்த நடிகை சாய் பல்லவி இது பற்றி கருத்து தெரிவித்துள்ளார்.

சாய் பல்லவி தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது : கடினமான காலகட்டத்தில் கேரளாவில் உள்ள நமது குடும்பத்தினர் சிக்கியிருப்பதை பார்ப்பது மிகுந்த மன வேதனையை தருகிறது. கேரள வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்கள் நலமுடன் இருக்க நமது முழு ஆதரவுக்கரத்தையும் நீட்டுவோம். நலமுடன் இருக்க பிரார்த்திப்போம் என தெரிவித்துள்ளார். தமிழகத்தை சேர்ந்த சில கட்சிகள் [ தமிழ் தேசிய கட்சி ] கேரளமக்களுக்கு உதவிவருவது குறிப்பிடத்தக்கது.

Previous «
Next »

In&out Cinema is a Indian digital media company based in Chennai, Tamilnadu. Founded by Francis Markus.B in 2016. In&out Cinema Provides verity of news, videos, reviews, exclusive interviews. on cinema, politics, culture, business, tech. sports around the world in Indian regional language Tamil. We are available in Face Book, Twitter, Instagram, Youtube, Google +, Pinterest and other social media platform.
  • facebook
  • twitter
  • googleplus
  • youtube
  • instagram
  • pinterest
Inandoutcinema Scrolling cinema news