Inandoutcinema - Tamil cinema news

சர்ச்சையில் சிக்கிய நடிகை ரெஜினா கேசன்ட்ரா – விவரம் உள்ளே

அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் ஐரோப்பிய நாடுகளை கலக்கிய கிகி சவால் நடன விளையாட்டு, இப்போது இந்தியாவிலும் நுழைந்து இருக்கிறது. ஓடும் காரில் இருந்து குதித்து நடனமாடி அந்த வீடியோக்களை வைரலாக்கி வருகிறார்கள். ஹாலிவுட் நடிகர் வில் சுமித் உள்பட பல்வேறு நடிகர்–நடிகைகள் இந்த பாடலுக்கு நடனமாடிய வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

இந்தி நடிகைகள் அடா சர்மா, நோரா பதே, நியா சர்மா, கரிஷ்மா சர்மா உள்ளிட்டோர் காரில் இருந்து இறங்கி கிகி பாடலுக்கு நடனமாடி வீடியோ வெளியிட்டுள்ளனர். தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக இருக்கும் ரெஜினாவும் ஓடும் காரில் இருந்து குதித்து கிகி பாடலுக்கு ஆடிய வீடியோவை தனது டுவிட்டரில் பகிர்ந்துள்ளார்.

இந்த நடனத்தால் விபத்துக்கள் ஏற்பட்டு உள்ளன. இதனால் இந்த மரண நடனத்தை ஆட வேண்டாம் என்று பல்வேறு மாநிலங்களில் போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். மீறி ஆடினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அறிவித்து உள்ளனர்.

இந்த நிலையில் ரசிகர்களை கிகி நடனத்துக்கு தூண்டுவதுபோல் நடனமாடி வீடியோ வெளியிட்ட ரெஜினா மற்றும் இந்தி நடிகைகள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என சில சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Previous «
Next »

In&out Cinema is a Indian digital media company based in Chennai, Tamilnadu. Founded by Francis Markus.B in 2016. In&out Cinema Provides verity of news, videos, reviews, exclusive interviews. on cinema, politics, culture, business, tech. sports around the world in Indian regional language Tamil. We are available in Face Book, Twitter, Instagram, Youtube, Google +, Pinterest and other social media platform.
  • facebook
  • twitter
  • googleplus
  • youtube
  • instagram
  • pinterest
Inandoutcinema Scrolling cinema news