விஜய் 63 படத்தில் நடிப்பதாக வெளியான செய்தி குறித்து பதிலளித்த நடிகை ராஷ்மிகா மந்தனா விவரம் உள்ளே

நடிகர் விஜய் சர்கார் படத்தைத் தொடர்ந்து மீண்டும் அட்லீ இயக்கத்தில் நடிக்க ஓப்பந்தமாகியுள்ளார். இதன் படப்பிடிப்பு 2019-ம் ஆண்டு தொடக்கத்தில் படப்பூஜையுடன் தொடங்க திட்டமிட்டுள்ளது படக்குழு. தற்போது விஜய் நடிக்கவிருப்பவர்களைத் தேர்வு செய்யும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. நவம்பர் 14-ம் தேதி இப்படத்தை தயாரிக்கவுள்ள ஏஜிஎஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக படம் பற்றிய தகவல்களை அறிவித்தது.

தளபதி 63 என பெயரிடப்பட்டுள்ள இப்படம் முழுக்க விளையாட்டை மையப்படுத்தி அமைக்கப்பட்டுள்ளது. இதில் விஜய்யுடன் நடிக்க விவேக், யோகிபாபு ஆகியோர் ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறார்கள். இசையமைப்பாளராக ஏ.ஆர்.ரஹ்மான், ஒளிப்பதிவாளராக ஜி.கே.விஷ்ணு, சண்டை வடிவமைப்பாளராக அனல் அரசு, பாடலாசிரியராக விவேக், எடிட்டராக ரூபன், கலை இயக்குநராக முத்துராஜ் ஆகியோரை ஒப்பந்தம் செய்திருக்கிறார்கள்.

இப்படம் 2019ம் ஆண்டு தீபாவளிக்கு வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.படத்தில் நடிக்கும் நடிகர் நடிகைகளை பற்றிய வதந்திகள் பரவ ஆரம்பித்தது. இப்படத்தில் ராஷ்மிகா மந்தனா நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியான வண்ணமிருந்தன. ஆனால், நயன்தாரா நாயகியாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார் என்று படக்குழு அறிவித்தது. இன்னிலையில் இது பற்றி நடிகை ராஷ்மிகா மந்தனா கூறியதாவது :

விஜய் சார் மற்று அட்லீ சாரின் அடுத்த படத்தில் நான் இருக்கிறேனா என்று நிறைய பேர் என்னிடம் கேட்கிறீர்கள். இந்த முறை அது நடக்கவில்லை. ஆனால், விரைவில் அது நடக்கும் என்று நான் நம்புகிறேன். உங்களைப் போலவே நானும் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளேன். உங்களிடமிருந்து வரும் இத்தகைய ஆதரவு நெகிழச் செய்கிறது. அங்கு நிச்சயம் எனது முதல் படம் விரைவில் வரும். உங்கள் அனைவரையும் நேசிக்கிறேன். திரும்பவும் சொல்கிறேன் நன்றி என கூறியுள்ளார்.

Previous «
Next »

In&out Cinema is a Indian digital media company based in Chennai, Tamilnadu. Founded by Francis Markus.B in 2016. In&out Cinema Provides verity of news, videos, reviews, exclusive interviews. on cinema, politics, culture, business, tech. sports around the world in Indian regional language Tamil. We are available in Face Book, Twitter, Instagram, Youtube, Google +, Pinterest and other social media platform.
  • facebook
  • twitter
  • googleplus
  • youtube
  • instagram
  • pinterest
Inandoutcinema Scrolling cinema news