சி. பிரேம் குஜமார் இயக்கத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடித்து வெளிவரவிருக்கும் திரைப்படம்தான் 96. இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக த்ரிஷா நடித்துள்ளார். மேலும் இந்த படத்தில் ஜனகராஜ், பாடகி ஜானகி, காலி வெங்கட் உட்பட பலர் நடிக்கின்றனர். இதனால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
காதலை மையப்படுத்தி உருவாகும் இந்த படத்தில், விஜய் சேதுபதி 3 கெட்-அப்களில் நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நடந்து முடிந்தது. கடந்த வருடமே வெளிவவேண்டிய இத்திரைப்படம் சில பிரச்சனைகளால் தள்ளிப்போனது. இப்பொழுதும் விஜய் சேதுபதியின் ஜூங்க படத்திற்கு பிறகே 96 வெளியாகும் என கூறப்படுகிறது.
விரைவில் இந்த படத்தின் வெளியிட்டு விவரங்கள் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் த்ரிஷாவுடன் இணைந்து நடித்தது குறித்து விஜய் சேதுபதிஇடம் கேள்வி எழுப்பப்பட்டது. இது குறித்து நடிகர் விஜய் சேதுபதி கூறியிருப்பதாவது : நடிப்பை அதிகமாக நேசிக்கிறார் த்ரிஷா.
எந்த காட்சியாக இருந்தாலும் அதை உணர்ந்து நடிப்பவர். அவரிடம் இருந்து நிறைய விஷயங்களை கற்றுக்கொண்டேன். படப்பிடிப்புக்கு சரியான நேரத்தில் வந்து விடுவார். ஒருநாள் கூட தாமதம் ஏற்பட்டது இல்லை. இந்த தொழில் பக்திதான் அவரை 15 ஆண்டுகளாக முன்னணி நடிகையாக வைத்து இருக்கிறது’ எனத் நடிகர் விஜய் சேதுபதி தெரிவித்தார்.