தேசிய விருது பெற்ற இயக்குனர் படத்தில் நடிக்கும் கமல் பட நடிகை – விவரம் உள்ளே

தமிழில் 2000-ம் ஆண்டு வெளியான காதல் ரோஜாவே என்ற படம் மூலம் அறிமுகமானவர் பூஜா குமார். பின்னர் வெளிநாட்டுக்கு சென்ற அவர் ஆங்கில படங்களில் மட்டும் அவ்வப்போது நடித்து வந்தார். நீண்ட இடைவெளிக்கு பிறகு 2013-ம் ஆண்டு விஸ்வரூபம் மூலம் தமிழ் திரையுலகுக்கு மீண்டும் கமல்ஹாசன் அவரை கூட்டி வந்தார்.

அதனை தொடர்ந்து உத்தமவில்லன், விஸ்வரூபம்-2 என தொடர்ந்து கமல் உடன் மட்டும் நடித்து வந்த அவர் வேறு படங்களில் கமிட் ஆகாமல் இருந்தார். இந்நிலையில், பிரபல ஒளிப்பதிவாளரும் இயக்குநருமான பிரியதர்சன் பாலிவுட்டில் இயக்க உள்ள படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார்.

தி இன்விசிபிள் மாஸ்க் என்ற பெயரில் தயாராகும் இந்த படம் மோகன்லால் நடிப்பில் வெளியான மலையாள படத்தின் ரீமேக் என கூறப்படுகிறது. தமிழில் நிமிர், காஞ்சிவரம், சில நேரங்களில் உள்ளிட்ட பல படங்களை பிரியதர்சன் இயக்கியுள்ளார்.

இவரது இயக்கத்தில் வெளியான காஞ்சிவரம் படம் தேசிய விருது வென்றது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தை பற்றிய மற்ற நடிகர், நடிகையர் விவரம் கூடிய விரைவில் அதிகாரபூர்வமகா அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Previous «
Next »

In&out Cinema is a Indian digital media company based in Chennai, Tamilnadu. Founded by Francis Markus.B in 2016. In&out Cinema Provides verity of news, videos, reviews, exclusive interviews. on cinema, politics, culture, business, tech. sports around the world in Indian regional language Tamil. We are available in Face Book, Twitter, Instagram, Youtube, Google +, Pinterest and other social media platform.
  • facebook
  • twitter
  • googleplus
  • youtube
  • instagram
  • pinterest
Inandoutcinema Scrolling cinema news