நடிப்புக்கு பைபை.. காதல் கணவருடன் ஆஸி.யில் செட்டிலாகும் பிரபல நடிகை

சுந்தர்.சி இயக்கத்தில் சன் டிவியில் ஒளிபரப்பான நந்தினி சீரியலில் கங்கா என்ற நாக கன்னியாக அறிமுகமானவர் கன்னட நடிகை நித்யா ராம். 2015ம் ஆண்டு ‘முட்டு மனசே’ என்ற கன்னட படத்தில் கதாநாயகியாக அறிமுகமான அவர், தொடர்ந்து திரைப்பட வாய்ப்புகள் அமையாததால் சீரியல் பக்கம் தன் கவனத்தை திருப்பினார். கன்னடத்தில் சில சீரியல்களில் நடித்தவர், நந்தினி மூலம் தமிழ் மக்களுக்கு அறிமுகமானார். அந்த சீரியல் அவருக்கு நல்ல பெயரைப் பெற்றுத் தந்ததைத் தொடர்ந்து தற்போது லட்சுமி ஸ்டோர்ஸ் சீரியலிலும் நடித்து வருகிறார்.

நித்யாவும், ஆஸ்திரேலிய தொழிலதிபர் கௌதம் என்பவரும் காதலித்து வருவதாக சமீபத்தில் ஒரு தகவல் வெளியானது. விரைவில் அவர்களது திருமணம் நடைபெறும் எனக் கூறப்பட்டது. தற்போது அதன் அடுத்தகட்டமாக அவர்களது திருமணம் வரும் 6ம் தேதி நடைபெறுவது உறுதியாகியுள்ளது.

திருமணம் முடிந்ததும் நித்யாவும் ஆஸ்திரேலியா சென்று விடுவாராம். அங்கேயே செட்டிலாகி விடும் முடிவில் அவர் இருக்கிறாராம். எனவே இனி அவரை சீரியல்களில் பார்க்க முடியாதே என அவரது ரசிகர்கள் வருத்தமடைந்துள்ளனர். ஆனாலும் அவரது திருமணத் தகவல் ரசிகர்களை மகிழ்ச்சி அடைய வைத்துள்ளது

Previous «
Next »

In&out Cinema is a Indian digital media company based in Chennai, Tamilnadu. Founded by Francis Markus.B in 2016. In&out Cinema Provides verity of news, videos, reviews, exclusive interviews. on cinema, politics, culture, business, tech. sports around the world in Indian regional language Tamil. We are available in Face Book, Twitter, Instagram, Youtube, Google +, Pinterest and other social media platform.
  • facebook
  • twitter
  • googleplus
  • youtube
  • instagram
  • pinterest
Inandoutcinema Scrolling cinema news