Inandoutcinema - Tamil cinema news

கொம்பு வச்ச சிங்கம்டா படத்தில் சசிகுமாருடன் ஜோடி சேரும் பிரபல நடிகை – விவரம் உள்ளே

மலையாள நடிகையான மடோனா ப்ரேமம் படத்திற்கு பிறகு தொடர்ந்து தமிழ் படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். இந்த படத்திற்கு பிறகு தமிழில் ககக போ, கவண், பவர் பாண்டி, ஜூங்கா போன்ற படங்களில் நடித்துள்ளார். இந்த படத்திலும் அவருக்கு 2ம் கதாநாயகியாக நடித்திருந்தார்.

தற்போது இவருக்கு பட வாய்ப்புகளும் குறைந்து வருகிறது. இவர் தற்போது கன்னடத்தில் கொட்டிக்கோபா படத்தின் இரண்டாம் பாகத்தில் நடித்து வருகிறார். இதன் பிறகு மீண்டும் தமிழ் சினிமாவில் சசிகுமார் படத்தின் மூலம் என்ட்ரி கொடுக்கவுள்ளார். சுந்தரபாண்டியன் படத்தின் மூலம் பிரபலமான சசிகுமார் மற்றும் இயக்குனர் எஸ்ஆர் பிரபாகரன் கூட்டணி மீண்டும் இணைந்துள்ளது.

இந்த படத்திற்கு கொம்பு வச்ச சிங்கம்டா என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் தலைப்பு மற்றும் முதல் புகைப்படத்தை நடிகர் சூர்யா சமீபத்தில் வெளியிட்டுள்ளார். இதன் பிறகு இந்த படத்தின் படப்பிடிப்பினை வரும் நவம்பர் 3ஆம் தேதி முதல் துவங்கவுள்ளனர்.

இந்த படத்தின் நாயகியான நடிகை மடோனா செபாஸ்டியன் பவர் பாண்டி படத்தில் கிராமத்து பெண்ணாக நடித்திருந்தார். இந்த படத்திற்கு பிறகு சசிகுமார் படத்தில் மீண்டும் கிராமத்து பெண்ணாக நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Previous «
Next »

In&out Cinema is a Indian digital media company based in Chennai, Tamilnadu. Founded by Francis Markus.B in 2016. In&out Cinema Provides verity of news, videos, reviews, exclusive interviews. on cinema, politics, culture, business, tech. sports around the world in Indian regional language Tamil. We are available in Face Book, Twitter, Instagram, Youtube, Google +, Pinterest and other social media platform.
  • facebook
  • twitter
  • googleplus
  • youtube
  • instagram
  • pinterest
Inandoutcinema Scrolling cinema news