பெண் பத்திரிகையாளரை அவதூராக பேசி வாக்கி கட்டிகொண்ட நடிகை கஸ்தூரி!

சென்னை: டிவிட்டரில் ஆக்டிவாக இருக்கும் நடிகை கஸ்தூரி நாட்டில் நடக்கும் சம்பவங்களுக்கு டிவிட்டரில் ரியாக்‌ஷன் கொடுத்து சர்ச்சையை கிளப்பிவிடுவார். நெட்டீசனக்ளும் அவரை கலாய்த்து தள்ளிவிடுவார்கள். இந்நிலையில், சமீபத்தில் இந்தியா வந்த டிவிட்டர் சிஇஓ-வை விமர்சனம் செய்து பிரச்னையில் சிக்கி உள்ளார்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு டிவிட்டர் சிஇஓ  ஜாக் இந்தியா வந்திருந்தார். அப்போது, டெல்லியில் பெண் பத்திரிகையாளர்களுடன் நடந்த ஒரு கருத்தரங்கில் தலீத் சமூகத்தை சேர்ந்த பத்திரிகையாளர் ஒருவர் அவருக்கு ஒரு படத்தை பரிசாக வழங்கினார். அதில், “பார்ப்பணிய ஆதிக்கத்தை ஒழிப்போம்” என்று குறிப்பிட்டு இருந்தது.

இந்த புகைப்படத்தை ஜாக் தனது டிவிட்டர் பக்கத்தில்  பகிர்த்தார். ஜாக்கின் இந்த செயலுக்கு டிவிட்டரில் கடும் எதிர்ப்பு எழுந்தது. குறிப்பாக பார்ப்பணிய சமூகத்தை சேர்ந்த பலர் ஜாக்கிற்கு எதிராக கண்டனக்குறல் எழுப்பி வருகின்றனர். இதற்கிடையில், ‘டிவிட்டர் இந்தியா’ சார்பில் இந்து ஒரு பெண் பத்திரிகையாளின் கருத்தே தவிர இதற்கும் டிவிட்டருக்கும் சம்மதம் இல்லை என்பது போல விளக்கமும் அளிக்கப்பட்டது.

இதற்கிடையில், நம்ம ஊரு நடிகை கஸ்தூரி இந்த சம்பவத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்திருந்தார். அவர், ஜாக்கை உங்கள் பெயை ஜான்ஆஸ் என்று மாற்றிகொள்ளுங்கள். உங்களை வைத்து அவர்கள் கருத்தை கூறிவிட்டார்கள். அடுத்த பிறந்தநாளுக்கு ‘யூத மேலாதிக்கம் ஒழிக’ என்ற கருத்தை பார்ப்பனர்களுடன் நீங்கள் நிற்பீர்கள் என்று ஆவேசமாக கூறியிருந்தார்.

இந்நிலையில், தலீத்துகளை அவமாணப்படுத்தும் விதமாக் பேசிய கஸ்தூரியின் கருத்துக்கு டிவிட்டரில் பலர் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். குறிப்பாக, முற்போக்கு சிந்தைனையாளர்களும், சாதி மறுப்பு கருத்துடையவர்கள் தங்கள் கருத்துக்களை தெரிவித்திருய்ந்தனர்.

இதில், பிரபல இந்து நாளிதழில் பணியாற்றும் பெண் பத்திரிகையாளர் ஒருவர் ‘ வெறும் ஃபாலோவர்ஸ்காக சமூக கருத்து சொல்லி பிரபலமடையர பல பேர்… கடைசில இப்படித்தான் முடிக்குறாங்க… உண்மைய எவ்வளவு நாள் மறைக்க முடியும்… Good job..! finally out… *slow clap*’ என்று கூறி தனது கருத்தை பதிவிட்டிருந்தார்.

இதில், கடுப்பாணி போன நடிகை கஸ்தூரி அவரை கடுமையாக விமர்சிக்க தொடங்கினார். நீங்கள் வேலை செய்யும் அலுவலகமே பார்ப்பர்னர்களோடது தான் அவர்களிடம் வேலை செய்துகொண்டு அவர்களையே ஏசுவீர்களார் என்று கூறியிருந்தார்.

கஸ்தூரியின் கருத்துக்கு பெண் பத்திரிகையாளர்  ‘என் கொள்கை என்னனு.. என் எழுத்துலேயே தெரியும்…அதுல என்னோட நிர்வாகம் தலையிட்டது இல்ல… நான் வேலை செய்றதுக்குத்தான் சம்பளம் தராங்க ’ஓசி’ ல இல்ல… என்று காட்டமாக பதில் அளித்திருந்தார்.

இந்நிலையில் இந்த விவகாரத்தில் பலரும் நடிகை கஸ்தூரியை நோங்கள் தங்கள் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

Previous «
Next »

In&out Cinema is a Indian digital media company based in Chennai, Tamilnadu. Founded by Francis Markus.B in 2016. In&out Cinema Provides verity of news, videos, reviews, exclusive interviews. on cinema, politics, culture, business, tech. sports around the world in Indian regional language Tamil. We are available in Face Book, Twitter, Instagram, Youtube, Google +, Pinterest and other social media platform.
  • facebook
  • twitter
  • googleplus
  • youtube
  • instagram
  • pinterest
Inandoutcinema Scrolling cinema news