Inandoutcinema - Tamil cinema news

தனது படத்திற்காக நடிகர் தனுஷின் உதவியை நாடும் ஹன்சிகா – விவரம் உள்ளே

தென்னிந்தியாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராக வளம் வரும் நடிகைகளில் ஒருவர்தான் நடிகை ஹன்சிகா மொத்வனி ஆகும். ஹன்சிகாவின் தாய்மொழி சிந்தியாக இருந்த போதும் தெலுங்கு, மராத்தி, பெங்காலி, ஆங்கிலம், இந்தி, துளு, தமிழ் ஆகிய மொழிகளை சரளமாகப் பேசும் திறன் உடையவர். அதனால் இவருக்கு பட வாய்ப்புகள் குவியத்தொடங்கியது.

ஹன்சிகா மோட்வானி, முதன்மையாக தமிழ், தெலுங்கு திரைப்படங்களில் தோன்றும் இவர் சில இந்தி, கன்னடத் திரைப்படங்களிலும் நடித்துள்ளார். நடிகர் தனுஷ் உடன் மாப்பிள்ளை திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழில் அறிமுகமானார். பின்னர் எங்கேயும் காதல், வேலாயுதம், ஒரு கல் ஒரு கண்ணாடி போன்ற தமிழ்த் திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார்.

அதன் பின்பு அவரது கவனம் தமிழுக்கு திரும்பியது. அடுத்து படங்களில் நடித்து வருவதால் 50 வது படத்தை நெருங்கிவிட்டார். அவரின் 50 வது படத்தின் தலைப்பை தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வளம் வரும் நடிகர் தனுஷ் வெளியிட இருக்கிறார்.

இந்த படத்தின் தலைப்பு நாளை இரவு 8.30 மணிக்கு நடிகர் தனுஷ் தனது அதிகாரபூர்வ சமூக வலைத்தளத்தில் வெளியிடுவார் என நடிகை ஹன்சிகா கூறியுள்ளார். இந்த செய்தி இணையத்தில் வைரலாக பரவி வருவது குறிப்பிடத்தக்கது.

 

Previous «
Next »

In&out Cinema is a Indian digital media company based in Chennai, Tamilnadu. Founded by Francis Markus.B in 2016. In&out Cinema Provides verity of news, videos, reviews, exclusive interviews. on cinema, politics, culture, business, tech. sports around the world in Indian regional language Tamil. We are available in Face Book, Twitter, Instagram, Youtube, Google +, Pinterest and other social media platform.
  • facebook
  • twitter
  • googleplus
  • youtube
  • instagram
  • pinterest
Inandoutcinema Scrolling cinema news