September 22, 2018
Inandoutcinema - Tamil cinema news

யூ டர்ன் போன்ற படக்கதைகளை இயக்குனர்கள் தொடர்ந்து எழுத வேண்டும் – பூமிகா சாவ்லா

ஷரத்தா ஸ்ரீ நாத் நடிப்பில் 2016 – ம் ஆண்டு கன்னட மொழியில் யு-டர்ன் படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தை லூசியா பட இயக்குநர் பவன்குமார் இயக்கியிருந்தார். ஒரு மேம்பாலத்தில் விதிமுறை மீறி யு-டர்ன் எடுப்பவர்கள் இறந்து போகிறார்கள். அதற்கு பின்னால் இருக்கும் மர்மத்தைப் பற்றியதே இந்தப் படத்தின் கதை.

கடந்த வருடம் இதே படம் மலையாளத்தில் கேர்ஃபுல் என்ற பெயரில் வெளியானது. தற்போது தமிழ் மற்றும், தெலுங்கில் மொழிமாற்றம் செய்யப்பட்டு உருவாகியுள்ளது. அதிக வசூலை குவித்த இந்தப் படத்தை இந்தியிலும் இயக்க உள்ளார் இயக்குநர் பவன் குமார். இந்த படத்தின் தமிழ் மற்றும் தெலுங்கு பதிப்பில் சமந்தா, ஆதி, ராகுல் ரவிந்திரன், பூமிகா சாவ்லா, நரைன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

இன்னிலையில் இந்த படத்தை பற்றி நடிகை பூமிகா சாவ்லா சமீபத்திய பேட்டியில் கூறியதாவது : தற்போது பெண்களை மையப்படுத்தி உருவாகும் படங்களின் போக்கை பற்றி அவர் கூறும்போது, நானும் பெண்களை மையப்படுத்திய திரைப்படங்களில் இடம் பெற்றுள்ளேன், மேலும் இந்த வகையிலான திரைப்படங்கள் கணிசமாக அதிகரித்து வருகின்றன.

திரைக்கதை எழுத்தாளர்கள் இது போன்ற திரைப்படங்கள் மற்றும் கதாபாத்திரங்களை தொடர்ந்து எழுத வேண்டும். தமிழ் திரைப்படங்களில் நடிக்க நிறைய வாய்ப்புகள் என்னை தேடி வருகின்றன. ஆனால், கதை மற்றும் படக்குழுவும் சரியாக அமைய வேண்டும். அப்போது தான் அது சரியாக ரசிகர்களிடம் சென்று சேரும்.

நான் 1999 ஆம் ஆண்டில் சினிமாவில் அறிமுகமானேன், கிட்டத்தட்ட இருபது ஆண்டுகள் ஆகின்றன. என் பெற்றோர் வெற்றி, தோல்வியை எவ்வாறு சமமாக அணுகுவது என்று கற்றுக் கொடுத்திருக்கிறார்கள். அதனால் வெற்றி, தோல்வி எதுவும் என்னை பாதிப்பதில்லை என நடிகை பூமிகா சாவ்லா கூறியுள்ளார்.

 

Previous «
Next »

In&out Cinema is a Indian digital media company based in Chennai, Tamilnadu. Founded by Francis Markus.B in 2016. In&out Cinema Provides verity of news, videos, reviews, exclusive interviews. on cinema, politics, culture, business, tech. sports around the world in Indian regional language Tamil. We are available in Face Book, Twitter, Instagram, Youtube, Google +, Pinterest and other social media platform.
  • facebook
  • twitter
  • googleplus
  • youtube
  • instagram
  • pinterest
Inandoutcinema Scrolling cinema news