September 19, 2018
Inandoutcinema - Tamil cinema news

பிரபல நடிகருடன் மீண்டும் இணைந்த நடிகை அனுஷ்கா – விவரம் உள்ளே

மாதவனுக்கு ஜோடியாக, சுந்தர்.சி இயக்கத்தில் 2006-ம் ஆண்டு வெளியான ரெண்டு திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் நடிகை அனுஷ்கா அறிமுகமாகியிருந்தார். இந்த படம் தான் அனுஷ்காவுக்கு தமிழில் முதல் படம் ஆகும். படத்தில் இடம்பெற்ற மொபைலா மொபைலா பாடல் அனுஷ்காவை ரசிகர்களிடம் கொண்டுபோய் சேர்த்தது.

இதையடுத்து தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் பல முன்னணி நடிகர்களுடன் நடித்தாலும், அனுஷ்கா மாதவனுடன் மட்டும் நடிக்கவில்லை. தற்போது 12 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் மாதவன் – அனுஷ்கா ஜோடி இணைந்து புதிய படம் ஒன்றில் நடிக்கவுள்ளனர்.

சைலன்ட் என்று பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தை இயக்குநர் ஹேமந்த் மதுகர் இயக்கவிருக்கிறார். பிரபல தெலுங்கு மற்றும் பாலிவுட் திரைக்கதை ஆசிரியர் கோனா வெங்கட் படத்துக்கு திரைக்கதை எழுதுவதோடு, பீப்புள் மீடியா ஃபேக்டரி நிறுவனத்தோடு இணைந்து தயாரிக்கிறார்.

சூப்பர் நேச்சுரல் த்ரில்லர் பாணியில் உருவாகவுள்ள படத்திற்காக செப்டம்பர் முதல்வாரத்தில் அமெரிக்காவில் செட் அமைத்து படப்பிடிப்பு நடத்த படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் உருவாகயிருக்கிறது.

விரைவில் இந்த படம் பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. நடிகை அனுஷ்கா திருமணம் செய்து கொண்டு திரை வாழ்க்கையை விட்டு ஒதுங்கப்போகிறார் என கூறப்பட்ட நிலையில், மீண்டும் நடிக்க வந்திருப்பது அவரது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Previous «
Next »

In&out Cinema is a Indian digital media company based in Chennai, Tamilnadu. Founded by Francis Markus.B in 2016. In&out Cinema Provides verity of news, videos, reviews, exclusive interviews. on cinema, politics, culture, business, tech. sports around the world in Indian regional language Tamil. We are available in Face Book, Twitter, Instagram, Youtube, Google +, Pinterest and other social media platform.
  • facebook
  • twitter
  • googleplus
  • youtube
  • instagram
  • pinterest
Inandoutcinema Scrolling cinema news