நடிகை அமலா பாலை தொலைபேசியில் மிரட்டிய இயக்குனர் சுசி கணேசன் – விவரம் உள்ளே

இயக்குனர் சுசி கணேசன் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக இயக்குனர் லீனா மணிமேகலை தெரிவித்தார். இந்த புகாரை மறுத்த சுசி கணேசன் ரூ. 1 நஷ்டஈடு கேட்டு லீனா மீது அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார். அதை தொடர்ந்து நடிகை அமலா பால் லீனா மணிமேகலைக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.

அப்போது நடிகை அமலா பால் ட்விட்டரில் கூறியிருப்பதாவது : நான் லீனா மணிமேகலையின் இயக்குனர் சுசி கணேசனின் மீதான குற்றச்சாட்டை ஆதரிக்கிறேன். பெண்ணியத்துக்கு சிறிதளவும் மரியாதை தர தெரியாத ஒரு மனிதரிடம் துணை இயக்குனராக அந்த பெண் என்ன பாடுபட்டு இருப்பாள் என்பது எனக்கு புரிகிறது என கூறினார்.

இந்த நிலையில் பாலியல் புகார் சொன்னதற்காக சுசிகணேசன் போனில் மிரட்டியதாக அமலாபால் கூறியுள்ளார். இதுகுறித்து டுவிட்டரில் அவர் கூறியதாவது : இயக்குனர் சுசிகணேசனும் அவரது மனைவி மஞ்சரியும் எனக்கு போன் செய்தார்கள். எனது நிலைமையை விளக்குவதற்காக நானும் போனை எடுத்தேன்.

சுசிகணேசன் மனைவியை சமாதானப்படுத்த முயன்றேன். ஆனால் சுசிகணேசன் என்னை மோசமாக திட்டி கேவலமாக பேசினார். இப்படி செய்து என்னை பயமுறுத்த பார்க்கிறார் என கூறியுள்ளார். இந்த செய்தி இணையத்தில் வைரலாக பரவி வருவது குறிப்பிடத்தக்கது.

Previous «
Next »

In&out Cinema is a Indian digital media company based in Chennai, Tamilnadu. Founded by Francis Markus.B in 2016. In&out Cinema Provides verity of news, videos, reviews, exclusive interviews. on cinema, politics, culture, business, tech. sports around the world in Indian regional language Tamil. We are available in Face Book, Twitter, Instagram, Youtube, Google +, Pinterest and other social media platform.
  • facebook
  • twitter
  • googleplus
  • youtube
  • instagram
  • pinterest
Inandoutcinema Scrolling cinema news