எனது கடின உழைப்பிற்க்கு காரணம் இவர்தான் – ஐஸ்வர்யா ராஜேஷ்

சிவகார்த்திகேயனின் தோழரும், நடிகர்,பாடலாசிரியர், பாடகர் எனப் பன்முகங்கள் கொண்டவருமான அருண்ராஜா காமராஜ், கனா படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். பெண்கள் கிரிக்கெட்டை மையமாக வைத்து இந்தப் படம் எடுக்கப்பட்டுள்ளது. கிரிக்கெட்டராக ஆக விரும்பும் மகளுக்கும், அதற்கு ஆதரவாக இருக்கும் தந்தைக்கும் இடையிலான சம்பவங்கள்தான் படத்தின் கதை. அப்பாவாக சத்யராஜும், மகளாக ஐஸ்வர்யா ராஜேஷும் நடித்துள்ளனர். இந்த படத்தை நடிகர் சிவகார்த்திகேயன் தயாரித்திருக்கிறார்.

இந்தப் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று மாலை நடைபெற்றது. அதில் படக்குழுவினர் உட்பட முன்னணி திரை பிரபலங்கள் பலர் கலந்துகொண்டனர். அப்போது பேசிய நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் கூறியதாவது : நான் கடுமையா உழைச்சிருக்கேன்னு எல்லோரும் சொல்றாங்க. கடுமையா உழைக்கணும்னு ஆசை மட்டும்தான் எனக்கு இருக்கு, ஆனால், அதை சாத்தியப்படுத்த அருண்ராஜா முதல் இந்தக் குழுவின் நிறைய நண்பர்கள்தான் என்னை உந்தி உழைக்க வைத்தார்கள்.

என்னுடைய அப்பா இருந்தால் சத்யராஜ் சார் மாதிரி தான் இருந்திருப்பார் என நினைக்கிறேன். என் அப்பா ஸ்தானத்தில் தான் அவரைப் பார்க்கிறேன். தமிழ் சினிமாவில் அனைவருக்கும் பிடிக்கும் ஒரு நடிகராக வருவார் தர்ஷன். தமிழ் சினிமாவில் இது ஒரு புதிய முயற்சியாக இருக்கும். எடிட்டர் ரூபன் படத்தைப் பார்த்து ரொம்ப நல்லாருக்குனு சொல்லிட்டார். அங்கேயே வெற்றி உறுதியாகி விட்டது. தயாரிப்பாளர் கலையரசு சார் இந்த படத்தை மக்களிடம் கொண்டு சேர்க்க இன்னமும் கடுமையாக உழைத்து வருகிறார் என நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் கூறியுள்ளார்.

Previous «
Next »

In&out Cinema is a Indian digital media company based in Chennai, Tamilnadu. Founded by Francis Markus.B in 2016. In&out Cinema Provides verity of news, videos, reviews, exclusive interviews. on cinema, politics, culture, business, tech. sports around the world in Indian regional language Tamil. We are available in Face Book, Twitter, Instagram, Youtube, Google +, Pinterest and other social media platform.
  • facebook
  • twitter
  • googleplus
  • youtube
  • instagram
  • pinterest
Inandoutcinema Scrolling cinema news