‘தளபதி63’ல் யோகிபாபு – டிவிட்டரில் சூசக தகவல்!

சென்னை: தெரி, மெர்சல் படங்களை தொடர்ந்து இயக்குனர் அட்லி விஜயின் 63வது அடுத்த படத்தை இயக்குவதாக அறிவிப்பு வெளியானது. இந்த படத்துக்கு  ஏ.ஆர்.ரஹமான் இசை அமைக்கிறார். ஏஜிஎஸ் எண்டர்டெயின்மெண்ட் தயாரிக்கிறது. முதற்கட்டமாக படத்தின் பணியாற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். கதாநாயகி, துணை நடிகர்கள், வில்லன் உள்ளிட்ட நடிகர்கள் தேர்வு பணி நடந்து வருகிறது.

இந்நிலையில், தளபதி 63ல் நடிக்க இருப்பதாக நடிகர் விவேக் சமீபத்தில் தெரிவித்திருந்தார். மேலும், இந்த படத்தில் முக்கிய வேடத்தில் ஒரு பிரபல நடிகர் நடிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது இது குறித்து அவர் நேற்று தனது டிவிட்டர் பக்கத்தில் சூசகமாக தெரிவித்துள்ளார். அந்த நடிகர் வேறு யாரும் இல்லை நம்ம யோகி பாபு தான்.

நடிகர் யோகிபாபு நேற்று தனது டிவிட்டர் பக்கத்தில் சர்கார் படத்தில் விஜயுடன் ஆடும் சிம்டாங்காரன் பாட்டில் வரும் ஸ்டில்லை எடுத்து போட்டுள்ளார். இது தளபதியுடன் அடுத்த படத்தில் அவர் நடிக்க உள்ளதை மறைமுகமாக தெரிவிப்பதுபோலவே உள்ளது. ஆனால், இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதுவரை வெளியிடவில்லை. சர்கார் படத்தில் முதல் முறையாக விஜயுடன் நடித்த யோகிபாபு விஜயின் ஓட்டை கள்ள ஓட்டு போட்டு முழு சம்பவத்துகும் திருப்புமுனையாக இருப்பார். தளபதி 63 படத்தில் 2வது முறையாக நடிக்க இருக்கும் அவர் என்ன செய்யபோகிறார் என்று பொறுத்திருந்து பார்ப்போம்.

Previous «
Next »

In&out Cinema is a Indian digital media company based in Chennai, Tamilnadu. Founded by Francis Markus.B in 2016. In&out Cinema Provides verity of news, videos, reviews, exclusive interviews. on cinema, politics, culture, business, tech. sports around the world in Indian regional language Tamil. We are available in Face Book, Twitter, Instagram, Youtube, Google +, Pinterest and other social media platform.
  • facebook
  • twitter
  • googleplus
  • youtube
  • instagram
  • pinterest
Inandoutcinema Scrolling cinema news