படத்தின் அசுரத்தனமான வளர்ச்சி எங்களை மாற்றிவிட்டது – யாஷ்

பிரசாந் நீல் இயக்கத்தில் நடிகர் யாஷ் நடிப்பில் மிக பிரம்மாண்டமாக உருவாகியிருக்கும் திரைப்படம்தான் கேஜிஎப். பேருந்து ஓட்டுனரின் மகனாக திரைத்துறையில் எந்த பின்புலமின்றி போராடி, வெற்றி பெற்ற கர்நாடகத்தின் டாப் ஸ்டார் ராக் ஸ்டார் யஷ் என இயக்குனர் ராஜமவுலியால் பாராட்டு பெற்றவர் நடிகர் யஷ். K.G.F. திரைபடம் இரண்டு பகுதிகளை கொண்டது.

முதல் பகுதி, K.G.F Chapter 1 ஆகும். இந்த படம் நேற்று வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இப்படம் தமிழ், கன்னடம், தெலுங்கு, மலையாளம், இந்தி என ஐந்து மொழிகளில் வெளியாகியுள்ளது. இது K.G.F என்ற கோலார் தங்க வயலின் பின்னனியை கொண்டு உருவாக்கப்பட்ட திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படத்தில் யஷ், ஸ்ரீநிதிஷைட்டி, அனந்த் நாக், மாளவிகா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். அன்பறிவு சண்டை இயக்கத்தில், ஸ்ரீகாந்த் படதொகுப்பில், கே.ஜீ.ஆர் அசோக் வசனத்தில், புவன்கவுடா ஒளிப்பதிவில், ரவி பசூரூர் இசையில், பிரசாத் நீல் இயக்கத்தில் ஹொம்பாலே பிலிம்ஸ் சார்பில் விஜய் கிரகந்தர் தாயாரிப்பில் கே.ஜீ.எப் படம் உருவாகியுள்ளது.

இன்னிலையில் இந்த படம் பற்றி நடிகர் யஷ் கூறியதாவது : முதலில் கன்னடத்தில் மட்டும் ரிலிஸ் செய்வதற்காக இந்த படம் தொடங்கப்பட்டது. படம் வளர வளர இதன் அசுர வளர்ச்சி எங்களை அனைத்து மொழிகளுக்கான படம் இது என்பதை உணர வைத்தது. பின்பு இதை அனைத்து மொழிகளிலும் வெளியிட திட்டமிட்டோம் என படத்தின் நாயகன் யஷ் கூறியுள்ளார்.

Previous «
Next »

In&out Cinema is a Indian digital media company based in Chennai, Tamilnadu. Founded by Francis Markus.B in 2016. In&out Cinema Provides verity of news, videos, reviews, exclusive interviews. on cinema, politics, culture, business, tech. sports around the world in Indian regional language Tamil. We are available in Face Book, Twitter, Instagram, Youtube, Google +, Pinterest and other social media platform.
  • facebook
  • twitter
  • googleplus
  • youtube
  • instagram
  • pinterest
Inandoutcinema Scrolling cinema news