சிவகார்த்திகேயனும், விஜய் சேதுபதியும் எனக்குப் பிறகு சினிமாவுக்கு வந்தவங்க – விஷ்ணு விஷால்

விஷ்ணு விஷால் நடிப்பில் ராம் குமார் இயக்கத்தில், சமீபத்தில் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற திரைப்படம்தான் ராட்சசன். இந்த படம் வெற்றி பெற்ற மகிழ்ச்சியில் விஷ்ணு விஷால் இருக்கிறார். இன்னிலையில் சமீபத்திய பெட்டியில் நடிகர் விஷ்ணு விஷால் கூறியதாவது : நல்ல படங்கள்ல நடிச்சேன். அதுல சில படங்களுக்கு எனக்குப் பாதிச் சம்பளம்கூட கைக்கு வரலை.

அதையெல்லாம் பொருட்படுத்தாமதான் ஓடிக்கிட்டு இருந்தேன். சில தயாரிப்பாளர்கள் நான் ஓடுறதைப் பயன்படுத்திக்கிட்டாங்க. கமர்ஷியல் படம்னு நீங்க இறங்கினா. காணாமப் போயிடுவீங்கனு சம்பளம் தராத ஒரு தயாரிப்பாளர் சொன்னார். யோசிச்சா, அவர் சொல்றது சரின்னுதான் தோணுச்சு. அதை மாத்தத்தான், வேலைனு வந்துட்டா வெள்ளைக்காரன், படத்துல நடிச்சேன். அதுக்கு வேற ஒருத்தர்தான் தயாரிப்பாளர். சில பிரச்னைகளால நானே தயாரிக்கவேண்டியதா போயிடுச்சு.

கதாநாயகன் படத்துக்கும் அதே நிலைமைதான். இப்படி சினிமாவுல தொடர்ந்து எதையாவது கத்துக்கிட்டே இருக்கேன். சுருக்கமாச் சொல்லணும்னா, எனக்குத் தயாரிப்பாளர் ஆகணும்னு ஆசை கிடையாது, சூழ்நிலை ஆக்கிடுச்சு. எனக்குப் போட்டி நானேதான். சிவகார்த்திகேயனும், விஜய் சேதுபதியும் எனக்குப் பிறகு சினிமாவுக்கு வந்தவங்க.

ஆனா, இப்போ வேற லெவல்ல இருக்காங்க. அவங்க வளர்ச்சி எனக்கு சந்தோஷம்தான். ஏன்னா, சிவகார்த்திகேயன் டிவி ஆர்ட்டிஸ்ட் டு சினிமா, விஜய் சேதுபதி ஜுனியர் ஆர்டிஸ்ட் டு ஹீரோனு 10 வருடம் கஷ்டப்பட்டு வந்திருக்காங்க. அவங்க கஷ்டத்துக்கு பலன் இப்போ கிடைச்சிருக்கு. என் கஷ்டத்துக்கான பலன் இனிமேதான் கிடைக்கும் என நடிகர் விஷ்ணு விஷால் கூறியுள்ளார்.

Previous «
Next »

In&out Cinema is a Indian digital media company based in Chennai, Tamilnadu. Founded by Francis Markus.B in 2016. In&out Cinema Provides verity of news, videos, reviews, exclusive interviews. on cinema, politics, culture, business, tech. sports around the world in Indian regional language Tamil. We are available in Face Book, Twitter, Instagram, Youtube, Google +, Pinterest and other social media platform.
  • facebook
  • twitter
  • googleplus
  • youtube
  • instagram
  • pinterest
Inandoutcinema Scrolling cinema news