உங்களுக்கு ஏது இவ்வளவு பணம் என அதிமுக எம்பி மற்றும் எம்எல்ஏக்களிடம் கேள்வி எழுப்பிய விஷால்

நடிகர் விஷால் நடிகராவதற்கு முன் நடிகர் அர்ஜுன் இடம் உதவி இயக்குனராகவும் பணி புரிந்துள்ளார். தயாரிப்பாளர் ஜி. கே. ரெட்டி, விஷாலின் தந்தை ஆவார். இவர் பிறப்பால் தெலுங்கராக இருந்தாலும் தமிழ்த் திரைப்படங்களின் மூலமே பிரபலமானார். இவர் முதல் முதலாக நடித்த செல்லமே, சண்டக்கோழி, திமிரு ஆகிய படங்கள் வெற்றி பெற்றன.

விஷால் தற்போது தென்னிந்திய நடிகர் சங்கத்தின் பொதுச்செயலாளர் பதவியிலும் உள்ளார். சமீபத்தில் லிங்குசாமியின் இயக்கத்தில், விஷால் மற்றும் ஜெயந்திலால் கடா ஆகியோரின் தயாரிப்பில் வெளியாகி ஓடிக்கொண்டிருக்கும் தமிழ் திரைப்படம்தான் சண்டக்கோழி 2 ஆகும். விஷாலின் 25வது படமான இந்த படத்தில் நாயகியாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார்.

இந்த படத்தின் மூலம் வரலட்சுமி வில்லி அவதாரம் எடுத்துள்ளார். இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைப்பில் உருவாகியுள்ள இந்த படம் கலைவையான விமர்சனத்தை பெற்று வருகிறது. இன்னிலையில் நடிகர் விஷால் எம்பி மற்றும் எம்எல்ஏக்களை விமர்சித்து கருத்து கூறியுள்ளார்.

ஒரு செய்தி சேனல் துவங்கப்படுவது குறித்து கேள்வி எழுப்பியுள்ளார் நடிகர் விஷால். மேலும் ஒரு புதிய செய்தி சேனல் வருகிறது. வாவ். ஒரு செய்தி சேனலை துவங்க நிறைய செலவாகும் என்று கேள்விப்பட்டேன்.

மாத சம்பளம் வாங்கும் எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்களாகிய உங்களுக்கு எப்படி இது போன்ற தொழில் செய்ய முடிகிறது. 2019ம் ஆண்டுக்காக காத்திருக்கிறேன் என நடிகர் விஷால் கூறியுள்ளார். நடிகர் விஷாலின் இந்த கருத்தை, அரசியல் ஆதாயம் பார்த்து பேசுவதாக பொதுமக்கள் கருது தெரிவித்து வருகின்றனர்.

Previous «
Next »

In&out Cinema is a Indian digital media company based in Chennai, Tamilnadu. Founded by Francis Markus.B in 2016. In&out Cinema Provides verity of news, videos, reviews, exclusive interviews. on cinema, politics, culture, business, tech. sports around the world in Indian regional language Tamil. We are available in Face Book, Twitter, Instagram, Youtube, Google +, Pinterest and other social media platform.
  • facebook
  • twitter
  • googleplus
  • youtube
  • instagram
  • pinterest
Inandoutcinema Scrolling cinema news