September 19, 2018
Inandoutcinema - Tamil cinema news

மக்கள் நல இயக்கம் என புதிய அமைப்பை தொடங்கிய நடிகர் விஷால் – அரசியலுக்கு அடித்தளம் போடுகிறாரா ? விவரம் உள்ளே

ஆந்திராவை பூர்விகமாக கொண்ட நடிகர் விஷால் தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வளம் வருபவர். இவர் அவ்வப்போது அரசியல் சார்ந்த பணிகளிலும் ஈடுபட்டு வருகிறார். நடிகர் விஷால், சமீபகாலமாக அரசியலில் அதிக ஈடுபாடு காட்டிவருகிறார். சில மாதங்கள் முன்பு நடைபெற்ற ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில், சுயேச்சையாக போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்தார்.

விஷால் அரசியல்வாதியாக களம் புகுந்ததால் தேர்தல் களம் பரபரத்தது. ஆனால் வேட்புமனு பரிசீலனையின்போது அவரது வேட்புமனு தள்ளுபடி செய்யப்பட்டது. இதனால் பெருத்த கேலி பேச்சுகளுக்கும் மற்றும் விமர்சனத்துக்குள்ளானார் நடிகர் விஷால் இதன்பிறகு சினிமாக்களில் கவனம் செலுத்தி வந்தார் விஷால்.

அவர் நடிப்பில் சில மாதங்களுக்கு முன்னதாக வெளியான இரும்புத்திரை படத்தின் 100 வது நாள் கொண்டாட்டம் மற்றும் அவரது பிறந்தநாள் கொண்டாட்டம் என இரு நிகழ்வையும் ஒரே மேடையில் அரகேற்றினர் விஷால். ஆனால் இப்போது திடீரென மக்கள் நல இயக்கம் என்ற பெயரில் புதிய அமைப்பை தொடங்கியுள்ளார்.

இப்போது விஷால், அதேபோன்ற ஒரு பெயரில், அமைப்பை துவங்கியுள்ளார். விஷால் துவங்கியுள்ள அமைப்பை கட்சியாக விரிவுபடுத்தி, களம் காண அவர் முயற்சி செய்யக்கூடும் என்று கூறப்படுகிறது. விஷால், அறிமுகப்படுத்தபட்ட கோடியில் விளம்பரத்தில், விவேகம், வித்தியாசம், விடாமுயற்சி மற்றும் அணி சேர்வோம், அன்பை விதைப்போம் என்ற வாசகங்கள் உள்ளன.

விஷால் போட்டோ நடுவேயும், இருபக்கமும் அன்னை தெரசா மற்றும் அப்துல் கலாம் ஆகியோர் படங்களும் இடம்பெற்றுள்ளன. மேலும் திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் போட்டியிடுவது குறித்து ரசிகர்களுடன் ஆலோசித்து முடிவெடுக்கப்படும் என நடிகர் விஷால் தெரிவித்துள்ளார். இந்த செய்தி இணையத்தில் வைரலாக பரவி வருவது குறிப்பிடத்தக்கது.

Previous «
Next »

In&out Cinema is a Indian digital media company based in Chennai, Tamilnadu. Founded by Francis Markus.B in 2016. In&out Cinema Provides verity of news, videos, reviews, exclusive interviews. on cinema, politics, culture, business, tech. sports around the world in Indian regional language Tamil. We are available in Face Book, Twitter, Instagram, Youtube, Google +, Pinterest and other social media platform.
  • facebook
  • twitter
  • googleplus
  • youtube
  • instagram
  • pinterest
Inandoutcinema Scrolling cinema news