September 21, 2018
Inandoutcinema - Tamil cinema news

மாறுபட்ட கதைக்களத்தை தேர்வு செய்த நடிகர் விக்ரம் பிரபு. புதிய படத்தின் தலைப்பு மட்டும் புகைப்படம் உள்ளே

தயாரிப்பாளர் கலைப்புலி எஸ். தாணு தயாரிக்கும் அடுத்தப் படம் பற்றிய அறிவிப்பு நேற்று வெளியாகும் என அறிவித்திருந்தனர். அதன்படி படத்தை பற்றிய அறிவிப்பை நேற்று மாலை அறிவித்தனர். இயக்குநர் ராதாமோகன் இயக்கத்தில் விக்ரம் பிரபு, சமுத்திரகனி, பிரகாஷ்ராஜ் ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள இந்தப் படத்திற்கு 60 வயது மாநிறம் எனப் பெயரிட்டுள்ளனர்.

இயக்குநர் ராதாமோகன் இயக்கத்தில் உருவாகும் இந்த படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைக்க இருப்பது கூடுதல் சிறப்பம்சமாகும். சமீபகாலமாக தோல்வி பாதையில் பயணிக்கும் விக்ரம் பிரபுவிற்கு இந்த படம் திருப்புமுனையாக இருக்கும் என கூறப்படுகிறது.

பக்கா படத்துக்குப் பிறகு விக்ரம் பிரபு நடிப்பில் வெளியாகும் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது. ராதாமோகன், இளையராஜா, விக்ரம் பிரபு, பிரகாஷ் ராஜ் என மாறுபட்ட கூட்டணியில் உருவாகும் இந்தப் படத்திற்கு மிகுந்த எதிர்பார்ப்பு நிலவிவருகிறது. இந்தப் படத்தை ஆகஸ்ட் மாதம் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாக கூறப்டுகிறது. விரைவில் இந்த படத்தின் வெளியிட்டு தேதி அறிவிக்கப்படும் எதிர்பார்க்கப்படுகிறது.

 

Previous «
Next »

In&out Cinema is a Indian digital media company based in Chennai, Tamilnadu. Founded by Francis Markus.B in 2016. In&out Cinema Provides verity of news, videos, reviews, exclusive interviews. on cinema, politics, culture, business, tech. sports around the world in Indian regional language Tamil. We are available in Face Book, Twitter, Instagram, Youtube, Google +, Pinterest and other social media platform.
  • facebook
  • twitter
  • googleplus
  • youtube
  • instagram
  • pinterest
Inandoutcinema Scrolling cinema news