திருமண விழாவிற்கு சென்ற நடிகர் விஜய்க்கு ஏற்பட்ட காயம் – சோகத்தில் ரசிகர்கள்

விஜய் ரசிகர் மன்றத்தின் அகில இந்திய தலைவர் ஆனந்த். புதுச்சேரி முன்னாள் எம்.எல்.ஏ.வான இவரது மகள் திருமண வரவேற்பு நிகழ்ச்சி புதுச்சேரியை அடுத்த நாவற்குளம் சங்கமித்திரா திருமண மண்டபத்தில் நேற்று மாலை நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் நடிகர் விஜய் பங்கேற்று மணமக்களை வாழ்த்துவார் என்று கூறப்பட்டதால், ஏராளமான விஜய் ரசிகர்கள் கல்யாண மண்டபத்துக்கு படையெடுத்தனர்.

இதனால் திருமண மண்டபத்தில் ஆயிரக்கணக்கான ரசிகர்கள், மேடையை நோக்கி முன்னேறியதால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. நடிகர் விஜய் தனது மனைவி சங்கீதாவுடன், கூட்ட நெரிசல்களைத் தாண்டி மண்டபத்துக்கு வந்தார். இதையடுத்து மணமேடை வந்த விஜய், மணமக்களை வாழ்த்தி, பரிசு வழங்கினார். அப்போதும் பலர் நெருக்கியடித்ததால், விஜய்யும், அவரது மனைவியும் செய்வது அறியாது திகைத்தனர்.

பவுன்ஸர்கள் எனப்படும் பாதுகாப்பு வீரர்களும் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் திணறினர். காலில் லேசான காயமடைந்த விஜய், மனைவி சங்கீதாவின் தோளில் கைபோட்டு, பெரும் சிரமத்துக்கு இடையே மண்டபத்தில் இருந்து வெளியேறினார். மண்டபத்துக்கு வெளியேயும் ரசிகர்கள் கலாட்டாவில் ஈடுபட்டதால் போலீஸார் தடியடி நடத்தி, அவரை பத்திரமாக காரில் அனுப்பிவைத்தனர். ரசிகர்களின் நெருக்குதல் காரணமாக மண்டபம் அலங்கோலமாக காட்சியளித்தது. சேர்கள் உடைக்கப்பட்டு, காலணிகள் ஆங்காங்கே சிதறிக் கிடந்தன.

 

Previous «
Next »

In&out Cinema is a Indian digital media company based in Chennai, Tamilnadu. Founded by Francis Markus.B in 2016. In&out Cinema Provides verity of news, videos, reviews, exclusive interviews. on cinema, politics, culture, business, tech. sports around the world in Indian regional language Tamil. We are available in Face Book, Twitter, Instagram, Youtube, Google +, Pinterest and other social media platform.
  • facebook
  • twitter
  • googleplus
  • youtube
  • instagram
  • pinterest
Inandoutcinema Scrolling cinema news