September 20, 2018
Inandoutcinema - Tamil cinema news

இணையத்தில் வைரலான நடிகர் விஜய் – விவரம் உள்ளே

திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும் முன்னாள் தமிழக முதல்வருமான கலைஞர் கருணாநிதி கடந்த சில நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் காவேரி மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். மருத்துவர்கள் எவ்வளவோ முயற்சி செய்தும் திமுக தலைவர் கருணாநிதி கடந்த 7-ம் தேதி மாலை 6.10 மணியளவில் சிகிச்சை பலனின்றி அகால மரணமடைந்தார்.

அதை தொடர்ந்து அவரின் உடல் முழு அரசு மரியாதையுடன், மெரினாவில் உள்ள அண்ணா நினைவிடம் அருகே நல்லடக்கம் செய்யப்பட்டது. மெரினாவில் திமுக தலைவர் கருணாநிதியின் நினைவிடத்தில், திமுக தொண்டர்கள், பொதுமக்கள் மற்றும் திரை பிரபலங்கள் என ஏராளமானோர் தொடர்ந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சர்கார் படத்தின் படப்பிடிப்புக்காக அமெரிக்கா சென்றிருந்தார் விஜய். இந்தப் படத்தின் படப்பிடிப்பு அமெரிக்காவில் நடந்து வருகிறது. இந்நிலையில், கருணாநிதி காலமான நேரத்தில் நடிகர் விஜய், அமெரிக்காவில் இருந்ததால் இறுதி சடங்கில் கலந்துகொள்ளவில்லை.

தற்போது சர்க்கார் படப்பிடிப்பை முடித்துக்கொண்டு அவசரமாக இந்தியா திரும்பினார். லாஸ் வேகாஸில் இருந்து விமானத்தில் பயணித்து சென்னை வந்தடைந்த விஜய், இன்று அதிகாலை நான்கு மணியளவில் சென்னை விமான நிலையத்தில் இருந்து நேரடியாக மெரினா கடற்கரையில் அமைந்துள்ள கருணாநிதியின் நினைவிடத்துக்குச் சென்று அஞ்சலிசெலுத்தினார். அப்போது அங்கு எடுக்கப்பட்ட காணொளி இணையத்தில் வைரலாக பரவிவருவது குறிப்பிடத்தக்கது.

Previous «
Next »

In&out Cinema is a Indian digital media company based in Chennai, Tamilnadu. Founded by Francis Markus.B in 2016. In&out Cinema Provides verity of news, videos, reviews, exclusive interviews. on cinema, politics, culture, business, tech. sports around the world in Indian regional language Tamil. We are available in Face Book, Twitter, Instagram, Youtube, Google +, Pinterest and other social media platform.
  • facebook
  • twitter
  • googleplus
  • youtube
  • instagram
  • pinterest
Inandoutcinema Scrolling cinema news