டெல்டா விவசாயிகளுக்கு உதவிகரம் நீட்டிய நடிகர் விஜய் சேதுபதி – விவரம் உள்ளே

தமிழகத்தில் கஜா புயலால் தஞ்சாவூர், புதுக்கோட்டை, கடலூர், நாகப்பட்டினம், திருவாரூர், கரூர், திண்டுக்கல் உள்ளிட்ட பல இடங்கள் பாதிக்கப்பட்டுள்ளது. கஜா புயலால் டெல்டா மாவட்ட மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். ஊர், உலகிற்கே சோறு போடும் விவசாயிகள் உண்ண உணவின்றி, குடிக்க நீரின்றி தவித்து வருகிறார்கள். இந்நிலையில் புயலால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கியுள்ளார் விஜய் சேதுபதி. புயலால் பாதிக்கப்பட்டுள்ள மக்கள் மெழுகுவர்த்தி வேண்டும் என்று கேட்டு வருகிறார்கள். இந்நிலையில் எமர்ஜென்சி லைட் உள்ளிட்ட ரூ. 25 லட்சம் மதிப்புள்ள நிவாரணப் பொருட்களை அளித்துள்ளார் நடிகர் விஜய் சேதுபதி. கஜா புயலால் பாதிக்கப்பட்டுள்ள மக்கள் நிவாரண உதவி கேட்டு கோரிக்கை விடுத்து வருகிறார்கள். ட்விட்டர், ஃபேஸ்புக்கில் சேவ் டெல்டா என்று போஸ்ட் போடும் பிரபலங்கள் மத்தியில், பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிய விஜய் சேதுபதியை மக்கள் பாராட்டி வருகின்றனர். இதே போன்று நடிகர் சிவகுமார் குடும்பத்தினர் டெல்டா மக்களுக்காக 50 லட்சம் நன்கொடை வழங்கியது குறிப்பிடத்தக்கது.

Previous «
Next »

In&out Cinema is a Indian digital media company based in Chennai, Tamilnadu. Founded by Francis Markus.B in 2016. In&out Cinema Provides verity of news, videos, reviews, exclusive interviews. on cinema, politics, culture, business, tech. sports around the world in Indian regional language Tamil. We are available in Face Book, Twitter, Instagram, Youtube, Google +, Pinterest and other social media platform.
  • facebook
  • twitter
  • googleplus
  • youtube
  • instagram
  • pinterest
Inandoutcinema Scrolling cinema news