ரஜினியின் பேச்சு குறித்து நடிகர் விஜய் சேதுபதியின் அதிரடி கருத்து

விஜய் சேதுபதியை வைத்து நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் என்ற வெற்றி படத்தை இயக்கியவர் பாலாஜி தரணிதரன். இவர் தற்போது விஜய் சேதுபதியின் 25-வது படமான சீதக்காதி படத்தையும் இயக்கியுள்ளார். இந்தப் படத்தில் விஜய் சேதுபதி 80 வயதுடைய அய்யா ஆதிமூலம் என்ற முதியவர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். விஜய் சேதுபதிக்கு ஜோடியாக மூத்த நடிகை அர்ச்சனா நடித்துள்ளார்.

இவர்களுடன் ரம்யா நம்பீசன், பார்வதி நாயர், மகேந்திரன், ராஜ்குமார் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சமீபத்தில் படத்தின் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. விஜய் சேதுபதியின் மாறுபட்ட நடிப்பில் உருவாகியிருக்கும் இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேப்பை பெற்று வருகிறது. இன்னிலையில் சமீபத்திய பெட்டியில் நடிகர் விஜய் சேதுபதி, ரஜினியை பற்றி கூறியுள்ளார். அதில் அவர் கூறியதாவது : மேற்குத்தொடர்ச்சி மலை’, ‘96′ போன்ற படங்களைப் பார்த்துவிட்டு பேசினார், பாராட்டினார்.

அதையெல்லாம் தாண்டி அவரோடு வேலை பார்த்ததைத் தான் பெரிதாக நினைக்கிறேன். ‘பேட்ட’ படத்தில் இரண்டு பேருக்குமான காட்சிகளில், என் வசனத்தை எல்லாம் படித்துவிட்டு, இப்படி நடிக்கலாம் என்று போவேன். ஆனால், ரஜினி சார் ஒவ்வொரு முறையும் ஆச்சர்யப்படுத்திக் கொண்டே இருந்தார். அவர் நடிப்புக்கு முன், நான் நினைத்ததைத் தாண்டி வேறொன்றைக் கொடுப்பது மாதிரி ஆகிவிட்டது. பேட்ட ஆடியோ விழாவில் அவர் என்னை மகா நடிகன் என புகழ்ந்தார்.

அது எனக்குக் கிடைத்த பொக்கிஷம். ரஜினி சார் உதிர்த்த அந்த வார்த்தைகள் என்னுடைய சொந்தம். எங்களைப் போன்றவர்களுக்கு ரஜினி சார், கமல் சார் தான் வழிகாட்டிகள். அவர்களின் பாதிப்பு இல்லாமல் நாங்கள் யாரும் சினிமாவுக்குள் வந்திருக்கவே முடியாது. 40 ஆண்டுகளுக்கும் மேலாக மக்கள் அன்பு செலுத்தும் ஒருவரிடம் இருந்து வரும் இதுபோன்ற வார்த்தைகளை மிகப் பெரியதாக நான் பார்க்கிறேன் என நடிகர் விஜய் சேதுபதி கூறியுள்ளார்.

Previous «
Next »

In&out Cinema is a Indian digital media company based in Chennai, Tamilnadu. Founded by Francis Markus.B in 2016. In&out Cinema Provides verity of news, videos, reviews, exclusive interviews. on cinema, politics, culture, business, tech. sports around the world in Indian regional language Tamil. We are available in Face Book, Twitter, Instagram, Youtube, Google +, Pinterest and other social media platform.
  • facebook
  • twitter
  • googleplus
  • youtube
  • instagram
  • pinterest
Inandoutcinema Scrolling cinema news