September 20, 2018
Inandoutcinema - Tamil cinema news

பேரறிவாளன் விடுதலை பற்றி பேசிய நடிகர் விஜய் சேதுபதி – விவரம் உள்ள

முன்னாள் பிரதமர் ராஜிவ் கொலையில் தொடர்புடையதாகக் குற்றம்சாட்டப்பட்டு, தண்டனை பெற்று வரும் பேரறிவாளன் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டிருந்தது. இந்த மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரின் விடுதலை தொடர்பாக முடிவெடுக்க தமிழக அரசுக்கு முழு அதிகாரம் உண்டு என தீர்ப்பளித்தது குறிப்பிடத்தக்கது.

இன்னிலையில் சென்னை போயஸ் தோட்டத்தில் நடந்த விழிப்புணர்வுக்கான வரைபடங்களின் வழித்தடங்கள்’ என்ற ஓவியக் கண்காட்சியில் சிறப்பு விருந்தினராக நடிகர் விஜய் சேதுபதி பங்குபெற்றார்.

அப்போது பேசிய அவர் மூன்றாம் பாலினத்தோருக்கு உள்ள முட்டுக்கட்டைகளை உடைத்து, அவர்கள் முன்னேற்றத்துக்கு உதவும் ஒரு ஓவிய கண்காட்சியாக இது உள்ளது என கூறினார். மேலும் ராஜிவ் கொலை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட 7 பேர் விடுதலை குறித்து நடிகர் விஜய் சேதுபதி கூறியதாவது : பேரறிவாளன் அற்புதம்மாவுக்கு இன்னும் குழந்தை தான். தமிழக அரசு அவரை விடுவிக்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தார்.

 

Previous «
Next »

In&out Cinema is a Indian digital media company based in Chennai, Tamilnadu. Founded by Francis Markus.B in 2016. In&out Cinema Provides verity of news, videos, reviews, exclusive interviews. on cinema, politics, culture, business, tech. sports around the world in Indian regional language Tamil. We are available in Face Book, Twitter, Instagram, Youtube, Google +, Pinterest and other social media platform.
  • facebook
  • twitter
  • googleplus
  • youtube
  • instagram
  • pinterest
Inandoutcinema Scrolling cinema news