September 20, 2018
Inandoutcinema - Tamil cinema news

கடுமையான விமர்சனங்கள் வரும்போது எனக்கு கோபம் வரும் – விஜய் சேதுபதி

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தயாரிப்பில் புதுமுக இயக்குனரான லெனின் பாரதி இயக்கத்தில் வெளிவந்துள்ள படம்தான் மேற்கு தொடர்ச்சி மலை ஆகும். முழுக்க முழுக்க புதுமுகங்களை வைத்து எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் வெளியான திரையரங்கில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

இதற்கு நன்றி தெறிவிக்கும் விதமாக நடிகர் விஜய் சேதுபதி பத்திரிக்கையாளர் சந்திப்பிற்கு ஏற்பாடு செய்தார். படக்குழுவினர் உட்பட முன்னணி திரைபிரபலங்கள் பலர் கலந்துகொண்டனர். பத்திரிகையாளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சியில் நடிகர் விஜய் சேதுபதி கூறியதாவது :

மேற்கு தொடர்ச்சி மலை திரைப்படத்தை விருப்பமில்லாமல் தயாரித்ததாகவும், பத்திரிகையாளர்கள் தூக்கி வைத்து கொண்டாடுவது செருப்பால் அடித்தது போல் உள்ளது எனவும் தெரிவித்தார். ஏனோதானோ என்று தான் இந்தப்படத்தை எடுத்தேன். இப்படத்தினால் எனக்கு எந்த லாபமும் கிடையாது.

என்னுடைய முந்தைய படங்களுக்கு பத்திரிகையாளர்களிடமிருந்து கடுமையான விமர்சனங்கள் வரும்போது எனக்கு கோபம் வரும். ஆனால், இந்த படத்தை அவர்கள் கொண்டாடுவதன் மூலம் அவர்களின் நிலைப்பாடு சரி என நிரூபித்துவிட்டனர். என்னுடைய கணக்கு பொய்யாகிவிட்டது என நடிகர் விஜய் சேதுபதி கூறியுள்ளார்.

Previous «
Next »

In&out Cinema is a Indian digital media company based in Chennai, Tamilnadu. Founded by Francis Markus.B in 2016. In&out Cinema Provides verity of news, videos, reviews, exclusive interviews. on cinema, politics, culture, business, tech. sports around the world in Indian regional language Tamil. We are available in Face Book, Twitter, Instagram, Youtube, Google +, Pinterest and other social media platform.
  • facebook
  • twitter
  • googleplus
  • youtube
  • instagram
  • pinterest
Inandoutcinema Scrolling cinema news