எத்தனை முறை கருத்து வேறுபாடு வந்தாலும் எங்களுக்குள் அன்பு இருக்கும் – விஜய் சேதுபதி

2.0 படத்தைத் தொடர்ந்து கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்திருக்கும் படம் பேட்ட ஆகும். பேட்ட படத்தில் ரஜினிகாந்துடன், சிம்ரன், த்ரிஷா, விஜய்சேதுபதி, சசிகுமார், பாலிவுட் நடிகர் நவாஸுதீன் சித்திக், சனந்த் ரெட்டி, மேகா ஆகாஷ், குரு சோமசுந்தரம், ராம்தாஸ், ராமச்சந்திரன் என பலர் நடித்திருக்கிறார்கள். அனிருத் இசையமைத்துள்ள இப்படத்துக்கு திரு ஒளிப்பதிவு செய்திருக்கிறார். சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இப்படத்தை உதயநிதி ஸ்டாலின் வெளியிடுகிறார். ஜனவரி 10-ம் தேதி வெளியீட்டுக்கு திரையரங்குகள் ஒப்பந்தம் செய்வது, விளம்பரப்படுத்துவது என படக்குழு தீவிரமாக பணிபுரிந்து வருகிறது. இதில் ஒரு பகுதியாக சன் பிக்சர்ஸ் நிறுவனம் தங்களுடைய ட்விட்டர் பக்கத்தில் படக்குழுவினருடைய பேட்டியை வெளியிட்டு வருகிறது.

இதில் பேட்ட படத்தில் வில்லனாக நடித்திருக்கும் விஜய்சேதுபதி பேட்டி சமீபத்தில் வெளியாகி உள்ளது. அதில் மறுபடியும் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் நடித்தது பற்றி என்ன நினைக்கிறீர்கள் ? என்ற கேள்விக்கு அவர் பதில் கூறியதாவது : இந்த கேள்வியை என்னிடம் கேட்கக்கூடாது என்று நினைக்கிறேன். நானும் கார்த்திக் சுப்புராஜும் சேர்ந்து பணிபுரிவது என்பது முடி வெட்டுவது போன்றது.

கார்த்திக் எப்போதும் என் மீது பெரிய நம்பிக்கை வைத்திருப்பார். எங்களுக்குள் எத்தனை முறை கருத்து வேறுபாடு வந்தாலும் அதையெல்லாம் தாண்டி எங்களுக்கு இடையில் அன்பு இருந்து கொண்டே இருக்கும். அவருக்கு மிகப்பெரிய நன்றியை கூறிக் கொள்கிறேன் என நடிகர் விஜய் சேதுபதி கூறியுள்ளார். பல சர்ச்சைகளில் சிக்கும் நடிகர் சங்க தலைவர் விஷாலிடம் கருத்து வேறுபட்டால் இதே போல் இருப்பீர்களா ? என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

Previous «
Next »

In&out Cinema is a Indian digital media company based in Chennai, Tamilnadu. Founded by Francis Markus.B in 2016. In&out Cinema Provides verity of news, videos, reviews, exclusive interviews. on cinema, politics, culture, business, tech. sports around the world in Indian regional language Tamil. We are available in Face Book, Twitter, Instagram, Youtube, Google +, Pinterest and other social media platform.
  • facebook
  • twitter
  • googleplus
  • youtube
  • instagram
  • pinterest
Inandoutcinema Scrolling cinema news