Inandoutcinema - Tamil cinema news

விஜய்சேதுபதி இப்போ எந்த படம் சூட்டிங்ல இருக்கார் தெரியுமா?

சென்னை: விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள ஜுங்கா படத்தின் ரிலீஸ் பணிகள் முழுவீச்சில் நடந்து வருகிறது. இது தவிர அவர் ‘‘96’’, ‘‘சூப்பர் டிலக்ஸ்’’ ‘‘சீதாக்காத்தி, செக்க சிவந்த வானம் உள்ளிட்ட படங்களிலும் நடித்து வருகிறார்.

இதுதவிர, பண்ணையாரும் பதிமினியும், சேதுபதி ஆகிய படங்களை இயக்கிய அருன்குமாருடன் விஜய் சேதுபதி மீண்டும் இணைகிறார் என்ற செய்தி ஏற்கவே வெளியானது.

இந்நிலையில், அந்த படத்தின் பூஜை மற்றும் முதல் நாள் படபிடிப்பு நேற்று முன்தினம் இயக்குனர் அருண்குமாரின் சொந்த ஊரான தேனி மாவட்டம் இலஞ்சி கிராமத்தில் நடந்தது. இதில், விஜய் சேதுபதி, அவரது மகன் சூரியா, நடிகை அஞ்சலி, படத்தின் இயக்குனர் அருண்குமார் மற்றும் படக்குவினர் கலந்துகொண்டனர். இந்த படத்தில் விஜய் சேதுபதியின் மகனும் நடிக்கவுள்ளதாக கூறப்படுக்கிறது.

முதல்கட்ட படபிடிப்பு தென்காசி, குற்றாலம் உள்ளிட்ட பகுதிகளில் நடக்கிறது. இரண்டாம்கட்ட படபிடிப்பு மலேசிவாயில் எடுக்க இயக்குனர் திட்டமிட்டுள்ளார். இந்த படத்திற்கு யுவன் இசை அமைக்கிறார். கே புரொடக்‌ஷன்ஸ் மற்றும் யுவனின் ஒய்.எஸ்.ஆர். பிலிம்ஸ் இணைந்து தயாரிக்கின்றனர்.

Previous «
Next »

In&out Cinema is a Indian digital media company based in Chennai, Tamilnadu. Founded by Francis Markus.B in 2016. In&out Cinema Provides verity of news, videos, reviews, exclusive interviews. on cinema, politics, culture, business, tech. sports around the world in Indian regional language Tamil. We are available in Face Book, Twitter, Instagram, Youtube, Google +, Pinterest and other social media platform.
  • facebook
  • twitter
  • googleplus
  • youtube
  • instagram
  • pinterest
Inandoutcinema Scrolling cinema news