Inandoutcinema - Tamil cinema news

ஆளுநர் அவர்களே, ஏழு பேருக்கு 28 ஆண்டுகள் போதும் – விஜய் சேதுபதி, ஜிவி பிரகாஷ்

பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேரை காலம் தாழ்த்தாமல் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்று தமிழ்த் திரையுலக பிரபலங்கள் பலரும் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை வலியுறுத்தி வருகின்றனர். ராஜிவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேர் விடுதலையை தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் காலதாமதம் செய்யாமல் அமைச்சரவை தீர்மானத்தை ஏற்று அவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்று அரசியல் தலைவர்கள், திரை பிரபலங்கள் என பலரும் வலியுறுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் ராஜீவ் கொலை வழக்கில் ஏழு பேர் 28 ஆண்டுகள் சிறையில் இருப்பதை தமிழ்த் திரையுலக பிரபலங்கள் #28YearsEnoughGovernor என்று குறிப்பிட்டு சமூக வலைதளங்களில் பதிவிட்டு டிரெண்ட் செய்து வருகின்றனர். இது பற்றி நடிகர் விஜய் சேதுபதி ட்விட்டரில் கூறியதாவது : இது வெறும் தமிழர்கள் சம்பந்தப்பட்ட பிரச்சினை அல்ல. மனித உரிமைகளைக் கருத்தில் கொள்வதற்கான கோரிக்கை. தயவு செய்து இரக்கம் கொள்ளுங்கள் ஆளுநரே. தயவுசெய்து செயல்படுங்கள் என பதிவிட்டுள்ளார்.

இது பற்றி ஜிவி பிரகாஷ் கூறியதாவது : போதும் போதும் . அவர்கள் வாழ்க்கையை வாழவிடுங்கள். அனைத்து நண்பர்களை அடையும் வரை பகிருங்கள் என நடிகர் ஜிவி பிரகாஷ் கூறியுள்ளார்.

Previous «
Next »

In&out Cinema is a Indian digital media company based in Chennai, Tamilnadu. Founded by Francis Markus.B in 2016. In&out Cinema Provides verity of news, videos, reviews, exclusive interviews. on cinema, politics, culture, business, tech. sports around the world in Indian regional language Tamil. We are available in Face Book, Twitter, Instagram, Youtube, Google +, Pinterest and other social media platform.
  • facebook
  • twitter
  • googleplus
  • youtube
  • instagram
  • pinterest
Inandoutcinema Scrolling cinema news