September 20, 2018
Inandoutcinema - Tamil cinema news

சர்க்கார் படத்தில் நடிகர் விஜய் முதலமைச்சராக நடிக்கிறாரா ? விவரம் உள்ளே

நடிகர் விஜய் எ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் உருவாகும் சர்கார் படத்தில் நடித்துவருகிறார். கத்தி துப்பாக்கி படத்தை தொடர்ந்து விஜய் மூன்றாவது முறையாக முருகதாஸ் இயக்கத்தில் நடித்துவருவது குறிப்பிடத்தக்கது.

இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்துவருகிறார். முக்கிய கதாபாத்திரத்தில் ராதாரவி, பழ.கருப்பையா மற்றும் வரலட்சுமி ஆகியோர் நடித்து வருகின்றனர். படத்தை வருகிற தீபாவளிக்கு ரிலீஸ் செய்ய இரவு பகலாக வேலை செய்துவருகிறார் இயக்குனர் முருகதாஸ்.

இன்னிலையில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் சர்கார் படத்தில் விஜய் முதல்–அமைச்சர் வேடத்தில் நடிப்பதாக தகவல் கசிந்துள்ளது. அமெரிக்காவில் இருந்து தேர்தலில் ஓட்டுப்போட சொந்த ஊருக்கு திரும்பும் அவர் தனது ஓட்டு ஏற்கனவே பதிவானது அறிந்து ஆவேசப்படுகிறார். அரசியலை தூய்மைப்படுத்த களம் இறங்குகிறார்.

இதனால் அரசியல்வாதிகள் அவர் மீது பகையாக, அவர்களுக்கு போட்டியாக கட்சி தொடங்கி தேர்தலில் நின்று ஜெயித்து முதல்–அமைச்சர் ஆவது போல் திரைக்கதை அமைத்து உள்ளனர் என்று தகவல் வெளியாகி உள்ளது. ஆனாலும் படக்குழுவினர் இதனை உறுதிப்படுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. விஜயின் சர்கார் படம் தீபாவளிக்கு வெளியாகிறது.

 

Previous «
Next »

In&out Cinema is a Indian digital media company based in Chennai, Tamilnadu. Founded by Francis Markus.B in 2016. In&out Cinema Provides verity of news, videos, reviews, exclusive interviews. on cinema, politics, culture, business, tech. sports around the world in Indian regional language Tamil. We are available in Face Book, Twitter, Instagram, Youtube, Google +, Pinterest and other social media platform.
  • facebook
  • twitter
  • googleplus
  • youtube
  • instagram
  • pinterest
Inandoutcinema Scrolling cinema news