சென்னை: உலகின் தலைச்சிறந்த நடிகர்கள் மற்றும் கலைஞர்களை ஊக்குவிக்கும் விதத்தில் ஆண்டுதோறும் ஐஏஆர்ஏ விருதுகள் வழங்கும் விழா நடத்தப்படுகிறது. இதன் 4ம் ஆண்டு (2018) விழா வரும் செப்டம்பர் மாதம் லண்டனில் நடக்க இருக்கிறது.
இதில், உலகில் தலை சிறந்த நடிகர்களுக்கான பட்டியல் சமீபத்தில் வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில் ஸ்டார் வார்ஸ் புகழ் ஜான் போயிகா, கெட் அவுட் திரைப்பட நடிகர் டேனியல் கலூயா என பல ஆங்கில நடிகர்களுடன் நடிகர் விஜய்யின் பெயரும் இடம் பெற்றுள்ளது.
இந்தியாவில் பல சிறந்த நடிகர்கள் இருந்தும் அனைவரையும் ஓரம் கட்டிவிட்டு நடிகர் விஜய்க்கு இந்த கவுரவம் கிடைத்துள்ளது. இந்த விருது நடிகர் விஜய் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான மெர்சல் படத்துக்காக அவர் தேர்வு செய்யப்பட்டு இருப்பது என்பது குறிப்பிடத்தக்கது. இது விஜய் ரசிகர்களுக்கு மட்டுமின்றி தமிழர்களுக்கு கிடைத்த அங்கீகாரமாக கருத படுகிறது.
Congratulations to all the nominees for the BEST INTERNATIONAL ACTOR@vijayjoseph
@khumbulanikaysabinu@joshuajackson@adjeteyanang@taimhassan@kennethokolie
⬇ ⬇
Click on this link to vote ➡https://t.co/3rKeT7JCQN .#IARA2018 #iaraawards #iara #TheIARAs pic.twitter.com/Zf8sQTOxir— IARA AWARDS (@IARA_Awards) July 10, 2018
ரசிகர்கள் வாக்களித்து தேர்வு செய்யும் முறையில் வழங்கப்படும் ஐஏஆர்ஏ விருதுகள் உலக அளவில் விஜய்க்கு இருக்கும் ரசிகர்களை காட்டுகிறது. மேலும், தமிழ் படங்களுக்கு உலக அளவில் எடுத்து செல்ல ஒரு வாய்ப்பாக உள்ளது.