Inandoutcinema - Tamil cinema news

திமுக தலைவர் கலைஞரை சந்திக்க வந்த நடிகர் விஜய் – விவரம் உள்ளே

திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும் முன்னாள் தமிழக முதல்வருமான கலைஞர் கருணாநிதி அவர்கள் சில நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் காவேரி மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இவரை சந்திக்க காவேரி மருத்துவமனை வளாகத்தில் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் காத்திருக்கின்றனர். முக்கிய அரசியல் பிரமுகர்களும் சினிமா பிரபலங்களும் மட்டுமே மருத்துவமனை உள்ளே செல்ல அனுமதிக்க படுகின்றனர்.

நடிகர் சிவகுமார், சூரிய, மற்றும் ரஜினி ஆகியோர் ஏற்கனவே வந்து நலம் விசாரித்து சென்றனர். இன்னிலையில், திமுக தலைவர் கருணாநிதியின் உடல் நலம் பற்றி கேட்டறிய, தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான நடிகர் விஜய், இன்று காலை காவேரி மருத்துவமனைக்கு வருகை தந்தார்.

மருத்துவமனையில், திமுக செயல் தலைவர் மு.க ஸ்டாலின் உள்ளிட்டோரை சந்தித்து கருணாநிதியின் உடல் நலம் பற்றி கேட்டறிந்தார். கலைஞரை தற்போது வரை நடிகர் விஜய் பார்க்க வில்லை என கூறப்படுகிறது.

Previous «
Next »

In&out Cinema is a Indian digital media company based in Chennai, Tamilnadu. Founded by Francis Markus.B in 2016. In&out Cinema Provides verity of news, videos, reviews, exclusive interviews. on cinema, politics, culture, business, tech. sports around the world in Indian regional language Tamil. We are available in Face Book, Twitter, Instagram, Youtube, Google +, Pinterest and other social media platform.
  • facebook
  • twitter
  • googleplus
  • youtube
  • instagram
  • pinterest
Inandoutcinema Scrolling cinema news