September 21, 2018
Inandoutcinema - Tamil cinema news

நடிகர் விஜய் அரசியல் நோக்கத்தில் ரசிகர்களை சந்திக்கிறாரா ? விவரம் உள்ளே

விஜய் தற்போது ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் படத்தில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இவர்கள் கூட்டணியில் ஏற்கனவே துப்பாக்கி, கத்தி படங்கள் வெளியாகி வரவேற்பை பெற்றன.

மீண்டும் இவர்களது கூட்டணி மூன்றாவது முறையாக இணைந்துள்ளனர். இந்த படம் தீபாவளிக்கு திரைக்கு வருகிறது. இந்நிலையில் நடிகர் விஜய் அரசியலுக்கு வரப்போவதாக ஏற்கனவே பரபரப்பு தகவல்கள் வந்தன. சில மாவட்டங்களில் ரசிகர்களின் மாநாடுகளையும் நடத்தினார். ரசிகர் மன்றத்தை விஜய் மக்கள் இயக்கமாக மாற்றி தமிழகம் முழுவதும் அதற்கு நிர்வாகிகளையும் நியமித்து உள்ளார். ரசிகர்கள் தொடர்ந்து பல்வேறு பகுதிகளில் ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி வருகிறார்கள். இந்த நிலையில் சென்னை அருகே உள்ள பனையூரில் கடந்த 2 நாட்களாக ரசிகர்களை விஜய் திடீரென்று சந்தித்து ஆலோசனை நடத்தினார். அவர்களுடன் புகைப்படமும் எடுத்துக்கொண்டார். ரசிகர்கள் அனைவருக்கும் உணவும் பரிமாறப்பட்டது. இது வழக்கமான சந்திப்புதான் என்றும், வேறு திட்டம் எதுவும் இல்லை என்றும் ரசிகர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இருந்தாலும் ரஜினி கமலை தொடர்ந்து நடிகர் விஜய் அரசியல் களத்தில் குதிப்பார் என்றும், இது பற்றிய அறிவிப்புகள் அவர் பிறந்தநாளன்று அதிகாரப்பூர்வாமாக அறிவிப்பார் என்றும் திரைதுறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Previous «
Next »

In&out Cinema is a Indian digital media company based in Chennai, Tamilnadu. Founded by Francis Markus.B in 2016. In&out Cinema Provides verity of news, videos, reviews, exclusive interviews. on cinema, politics, culture, business, tech. sports around the world in Indian regional language Tamil. We are available in Face Book, Twitter, Instagram, Youtube, Google +, Pinterest and other social media platform.
  • facebook
  • twitter
  • googleplus
  • youtube
  • instagram
  • pinterest
Inandoutcinema Scrolling cinema news