September 21, 2018
Inandoutcinema - Tamil cinema news

ஐஏஆர்எ விருது விழாவின் இறுதி பட்டியலில் நுழைந்த நடிகர் விஜய். விவரம் உள்ளே

விஜயின் சர்கார் படம் தீபாவளிக்கு வருவது உறுதியாகியுள்ளது. இந்த படத்தில் விஜய் ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். ஏ.ஆர்.முருகதாஸ் இயக்குகிறார். விஜய் அரசியல்வாதிகளுக்கு எதிராக போராடும் கதையம்சத்தில் சர்கார் தயாராகிறது. இந்த நிலையில் சர்கார் படத்தின் டிரெய்லரை அடுத்த மாதம் 13-ந்தேதி விநாயகர் சதுர்த்தியில் வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டு உள்ளனர்.

இன்னிலையில் விஜய் நடிப்பில் கடந்த வருடம் அட்லி இயக்கத்தில் வெளியான மெர்சல் திரைப்படம் ரசிகர்களின் ஆதரவை பெற்று மாபெரும் வெற்றி பெற்றது. இன்னிலையில் மெர்சல் படத்தில் நடித்தற்காக விஜய்க்கு உலக அளவில் அங்கீகாரம் கிடைக்கவுள்ளது. INTERNATION ACHIEVEMENT RECOGNITION AWARDS என்கிற 2018 -ம் ஆண்டுக்கான ஐஏஆர்எ விருது பரிந்துரை பட்டியல்கள் கடந்த ஜூலை மாதம் 21 – ம் தேதி வெளியிடப்பட்டன.

2014 – ம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வரும் இந்த சர்வதேச விருது பரிந்துரைப் பட்டியல்களில் சிறந்த நடிகர் மற்றும் சிறந்த சர்வதேச நடிகர் ஆகிய இரு பிரிவுகளில் மெர்சல் படத்தில் நடித்ததற்காக விஜய் இடம்பெற்றிருந்தார். இந்த பரிந்துரைப் பட்டியலில் இடம்பெற்ற நடிகர்களுக்கு ரசிகர்கள் வாக்களிக்கலாம்.

அதிக வாக்குகள் பெற்ற நடிகர்களுக்கு விருது வழங்கப்படும் எனத் கூறப்படுகிறது. இன்னிலையில் IARA – க்கு தேர்வாகியுள்ள 4 நபர்களின் பெயரை ஐஏஆர்எ வெளியிட்டுள்ளது. அதில் விஜய், கென்னத் ஓகோலி, டைம் ஹசன், ஜோஷுவா ஜேக்‌ஷன் ஆகியோரின் பெயர்கள் இடம்பெற்றுள்ளது.

இவர்கள் அனைவரும் இறுதிச்சுற்றுக்கு வந்துள்ளதாக தெரிவித்திருக்கும் ஐஏஆர்எ வரும் 22 – ம் தேதி லண்டனில் இவ்விருது வழங்கப்பட உள்ளதாகவும் தெரிவித்திருக்கிறது. இந்த செய்தி இணையத்தில் வைரலாக பரவி வருவது குறிப்பிடத்தக்கது.

Previous «
Next »

In&out Cinema is a Indian digital media company based in Chennai, Tamilnadu. Founded by Francis Markus.B in 2016. In&out Cinema Provides verity of news, videos, reviews, exclusive interviews. on cinema, politics, culture, business, tech. sports around the world in Indian regional language Tamil. We are available in Face Book, Twitter, Instagram, Youtube, Google +, Pinterest and other social media platform.
  • facebook
  • twitter
  • googleplus
  • youtube
  • instagram
  • pinterest
Inandoutcinema Scrolling cinema news