சென்னை: பழம்பெரும் நகைச்சுவை நடிகரான வெள்ளை சுப்பையா உடல்நலக்குறைவால் நேற்று காலமானார். அவருக்கு வயது 80.
கரகாட்டக்காரன், வைதேதி காத்திருந்தாள், மன்னன் உள்ளிட்ட 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளவர் நடிகர் வெள்ளை சுப்பையா. இவரது சொந்த ஊர் மேட்டுப்பாளையம் அருகே உள்ள புஞ்சை புளியம்பட்டி ஆகும். இவர் எம்.ஜி.அர்., சிவாஜி காலத்தில் இருந்தே சினிமாவில் நடித்து வந்தார்.
இதனிடையே, கடந்த சில அண்டுகளுக்கு முன்பு அவருக்கு தொண்டையில் கேன்சர் கட்டி வளர்ந்து உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்தார். சினிமாவில் பிரபமானவர் என்றாலும் பட வாப்புகள் இல்லாததால் வருமாணம் இன்றி வெள்ளை சுப்பையா அவதிப்பட்டு வந்தார். மேலும், மருத்துவ செலவுக்கு கூட பணம் இல்லாமல் வருமையில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், நடிகர் வெள்ளை சுப்பையா நேற்று உடல் நலக்குறைவால் காலமானார். அவரது இறுதி சடங்கு இன்று நடக்கிறது. நடிகர் வெள்ளை சுப்பையாவின் மரணத்திற்கு திரை உலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.