சீதக்காதி படத்தில் வில்லனாக அறிமுகமாகும் பிரபல நடிகரின் அண்ணன் – விவரம் உள்ளே

நடுவுல கொஞ்சம் பக்கத்தை காணோம் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான பாலாஜி தரணீதரன், தற்போது வெளியவிருக்கும், விஜய் சேதுபதியின் 25 படமான சீதக்காதி படத்தை இயக்கியுள்ளார். இந்த படம் அடுத்த மாதம் வெளியவிருக்கிறது. பேஸ்ஸன் ஸ்டுடியோஸ் இந்த சீதக்காதி படத்தை தயாரித்திருக்கிறது.

கோவிந்த் வசந்தாவின் முதல் சிங்கிள் பாடல் மிகப்பெரிய ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றதோடு, ரசிகர்களிடம் அதிகமான தாக்கத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது. இந்த படத்தில் நடிக்கும் முன்னணி நடிகர்களின் கதாபாத்திரங்களின் பெயர்களை படக்குழு சமீபத்தில் வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இந்த படத்தில் நேர்மறை கதாபாத்திரத்தில் நடிக்கும் நடிகர் யார் என்பதை படக்குழு வெளியிட்டுள்ளது. டிசம்பர் 20 அன்று உலகமெங்கும் வெளியிட திட்டமிடப்பட்டுள்ள இந்த நகைச்சுவை மற்றும் உணர்ச்சிகளை கொண்ட படத்தில் வில்லனாக, இதுவரை அறியப்படாத ஒரு நடிகர் நடிப்பது வியப்பில் ஆழ்த்தியள்ளது.

நடிகர் வைபவ்வின் மூத்த சகோதரர் சுனில், இந்த படத்தில் எதிர்மறையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். நடிகர் வைபவின் அண்ணன் நடிக்கும் முதல் படமாக இந்த சீதக்காதி படம் அமைந்துள்ளது. இந்த செய்தி இணையத்தில் வைரலாக பரவி வருவது குறிப்பிடத்தக்கது.

Previous «
Next »

In&out Cinema is a Indian digital media company based in Chennai, Tamilnadu. Founded by Francis Markus.B in 2016. In&out Cinema Provides verity of news, videos, reviews, exclusive interviews. on cinema, politics, culture, business, tech. sports around the world in Indian regional language Tamil. We are available in Face Book, Twitter, Instagram, Youtube, Google +, Pinterest and other social media platform.
  • facebook
  • twitter
  • googleplus
  • youtube
  • instagram
  • pinterest
Inandoutcinema Scrolling cinema news