இதுவும் கடந்து போகும். விஜய் தேவரகொண்டாவிற்கு ஆறுதல் கூறிய நடிகர் சூர்யா – விவரம் உள்ளே

அர்ஜுன் ரெட்டி தெலுங்குப் படத்தின் மூலம் இந்தியா முழுவதும் பிரபலமானவர் விஜய் தேவரகொண்டா. தமிழ் மட்டுமின்றி, இந்தியிலும் ‘அர்ஜுன் ரெட்டி’ ரீமேக் செய்யப்பட்டு வருகிறது. அதன்பிறகு அவர் நடித்த கீதா கோவிந்தம் படமும் சூப்பர் ஹிட் ஆனது. விஜய் தேவரகொண்டா நடிப்பில் தமிழ், தெலுங்கில் வெளியான நோட்டா படமும் ஓரளவு வரவேற்பைப் பெற்றது.

தெலுங்கு திரையுலகில் கீதா கோவிந்தம் படத்தைத் தொடர்ந்து டாக்ஸிவாலா என்ற படத்தில் நடித்துள்ளார் விஜய் தேவரகொண்டா. ராகுல் சங்கிரிட்யன் இயக்கியுள்ள இந்தப் படத்தில், பிரியங்கா ஜவால்கர், மாளவிகா நாயர் ஆகியோர் நடித்துள்ளனர். இந்தப் படம் நாளை வெளியாக இருந்தது. இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு படம் ஆன்லைனில் திருட்டுத்தனமாக வெளியாகிவிட்டது.

படம் ரிலீஸுக்கு முன்பே ஆன்லைனில் வெளியானதால், படக்குழுவினர் மட்டுமின்றி, திரையுலகமே அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளது. நான் சோர்வடையும்போதெல்லாம் என்னை உற்சாகப்படுத்துவது யார் தெரியுமா ? நீங்கள் தான். எல்லா கூச்சல்களுக்கு நடுவிலும், உங்கள் அன்பு எனக்கு சத்தமாகக் கேட்கிறது என ட்விட்டரில் விஜய் தேவரகொண்டா கருத்து ஒன்றை பதிவிட்டுள்ளார்.

இந்த செய்தி இணையத்தில் வைரலாக பரவியது. இதனால் நடிகர் விஜய் தேவரகொண்டாவிற்கு பல்வேறு திரை பிரபலங்கள் ஆறுதல் கூறிவந்தனர். இந்நிலையில் நடிகர் சூர்யாவும் விஜய் தேவராகிகொண்டாவிற்கு ஆறுதல் கூறியுள்ளார். அதை ரீ ட்வீட் செய்து நடிகர் சூர்யா கூறியதாவது :

எங்கள் அனைவரின் அன்பும் உங்களுக்குண்டு. இதுவும் கடந்து போகும். ஆனால், நீங்கள் இங்கு நிலைத்திருக்கப் போகிறீர்கள். டாக்ஸிவாலா படத்தை எதிர் நோக்குகிறேன் என ஆறுதல் தரும் வகையில் நடிகர் சூர்யா கூறியுள்ளார்.

Previous «
Next »

In&out Cinema is a Indian digital media company based in Chennai, Tamilnadu. Founded by Francis Markus.B in 2016. In&out Cinema Provides verity of news, videos, reviews, exclusive interviews. on cinema, politics, culture, business, tech. sports around the world in Indian regional language Tamil. We are available in Face Book, Twitter, Instagram, Youtube, Google +, Pinterest and other social media platform.
  • facebook
  • twitter
  • googleplus
  • youtube
  • instagram
  • pinterest
Inandoutcinema Scrolling cinema news