Inandoutcinema - Tamil cinema news

விவசாயிகளுக்கு 1 கோடி ரூபாய் நன்கொடையாக வழங்கிய நடிகர் சூர்யா. விவரம் உள்ளே

நடிகர் கார்த்தி நடிப்பில் விவசாயம் மற்றும் கிராமத்து பின்னணியில் உருவாகியுள்ள படம்தான் கடைக்குட்டி சிங்கம் ஆகும். இந்த படத்தில் நடிகர் கார்த்தியுடன் சூரி, அர்த்தனா பினு, சத்யராஜ், சாயிஷா, பிரியா பவானிசங்கர், பானுப்ரியா, விஜி சந்திரசேகர், பொன்வண்ணன், உட்பட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

இதை நடிகர் சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படத்தை பாண்டிராஜ் இயக்கியுள்ளார். இந்த படம் சமீபத்தில் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. முன்னணி திரை பிரபலங்கள் பலரும் இந்த படத்தை வெகுவாக பாராட்டி வருகின்றனர்.

இன்னிலையில் இந்த படத்தின் வெற்றி விழா நேற்று சென்னை வடபழனியில் உள்ள க்ரீன் பார்க் ஹோட்டலில் நடைபெற்றது. இதில் நடிகர் சூர்யா மேடையில் பேசும்போது விவசாயிகளுக்கு 1 கோடி வழங்குவதாக தெரிவித்தார். விவசாய மேம்பாட்டுக்கு ஒரு கோடி ரூபாயை இவர் நன்கொடையாக வழங்கி உள்ளது குறிப்பிடத்தக்கது.

 

Previous «
Next »

In&out Cinema is a Indian digital media company based in Chennai, Tamilnadu. Founded by Francis Markus.B in 2016. In&out Cinema Provides verity of news, videos, reviews, exclusive interviews. on cinema, politics, culture, business, tech. sports around the world in Indian regional language Tamil. We are available in Face Book, Twitter, Instagram, Youtube, Google +, Pinterest and other social media platform.
  • facebook
  • twitter
  • googleplus
  • youtube
  • instagram
  • pinterest
Inandoutcinema Scrolling cinema news