September 21, 2018
Inandoutcinema - Tamil cinema news

படப்பிடிப்பு தளத்தில் ரசிகர்களிடம் சிக்கிக்கொண்ட நடிகர் சூர்யா – விவரம் உள்ளே

இயக்குநர் செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் படம் என்ஜிகே. என்.ஜி.கே. படம் அரசியல் சார்ந்த கதையம்சத்தில் தயாராவதாக கூறப்படுகிறது. சூர்யாவின் முதல் தோற்றத்தையும் இணையத்தில் வெளியிட்டு உள்ளனர்.

இந்தப் படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக சாய் பல்லவி, ரகுல் ப்ரீத் சிங் ஆகியோர் நடித்து வருகின்றனர். விறுவிறுப்பாக நடந்த இதன் படிப்பிடிப்பை செல்வராகவனுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் நிறுத்தி வைத்தனர்.

இப்போது மீண்டும் படப்பிடிப்பு தொடங்கி உள்ளது. சென்னை பூந்தமல்லியிலும், கிழக்கு கடற்கரை சாலையிலும் அரங்குகள் அமைத்து படப்பிடிப்பை நடத்தி முடித்துவிட்டு ஆந்திராவில் உள்ள ராஜமுந்திரியில் சில காட்சிகளை படமாக்க படக்குழுவினர் அங்கு முகாமிட்டுள்ளனர்.

படப்பிடிப்பில் ஈடுபட்டு வருகையில் சூர்யாவின் ரசிகர்கள் படப்பிடிப்பு தளத்திற்கு வந்து முற்றுகையிட்டனர். படப்பிடிப்பு தளத்திற்கு கேரவனில் வந்த நடிகர் சூர்யாவை சூழ்ந்து கொண்ட ரசிகர்கள், கேரவனில் இருந்து இறங்கிய அவரை முற்றுகையிட்டு செல்பி எடுக்கவும், கைகுலுக்கவும் முண்டியடித்தனர்.

ரசிகர்களை கட்டுப்படுத்த முடியாமல் பாதுகாவலர்கள் திணறினார்கள். இதனால் அவர் படப்பிடிப்பு தளத்திற்கு செல்லமுடியாத நிலை ஏற்பட்டது. இந்த வீடியோ சமூக வலைதளங்களிலும் வேகமாகப் பரவிவருவது குறிப்பிடத்தக்கது.

Previous «
Next »

In&out Cinema is a Indian digital media company based in Chennai, Tamilnadu. Founded by Francis Markus.B in 2016. In&out Cinema Provides verity of news, videos, reviews, exclusive interviews. on cinema, politics, culture, business, tech. sports around the world in Indian regional language Tamil. We are available in Face Book, Twitter, Instagram, Youtube, Google +, Pinterest and other social media platform.
  • facebook
  • twitter
  • googleplus
  • youtube
  • instagram
  • pinterest
Inandoutcinema Scrolling cinema news