September 18, 2018
Inandoutcinema - Tamil cinema news

இப்போது உள்ள கல்வி முறை நடைமுறைக்கு சாத்தியமில்லாதது. நடிகர் சூர்யா ஆவேசம்

சூர்யாவின் அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் புத்தக வெளியிட்டு விழா, அகரம் கல்வி அறக்கட்டளை சார்பில் வெகு விமர்சையாக நடைபெற்றது. அகரம் கல்வி அறக்கட்டளை சார்பில் சென்னையில் நடந்த அறம் செய்ய விரும்பு நூல் வெளியீட்டு விழாவில் அதன் நிறுவனரான நடிகர் சூர்யா கலந்து கொண்டார். விழாவில் நடிகர் சூர்யா பேசியதாவது : தாய் தந்தையர் படிப்பறிவில்லாமலும் படிக்க தேவையான புத்தகம் பேனா வாங்க முடியாமலும் தவிக்கும் முதல் தலைமுறை மாணவர்களுக்கு கல்வி உதவிகள் வழங்குவதற்காக அகரம் அறக்கட்டளையை தொடங்கினோம்.

தகுதியும் திறமையும் இருந்தும் வசதி மட்டும் இல்லாத காரணத்தினால் அவர்கள் வாழ்க்கை மாற வேண்டுமா ? வறுமை காரணமாக கூலி வேலைக்கு செல்ல வேண்டுமா ? என்ற கேள்விகளுக்கு விடையாகத்தான் இந்த அமைப்பை ஆரம்பித்தோம். திறமை வாய்ந்த குழந்தைகளை கண்டறிந்து அவர்களை வழிநடத்துகிறோம். பல அரசு பள்ளிகளில் குழந்தைகள் ஆசிரியர் இல்லாமல் படித்துக்கொண்டு இருக்கிறார்கள். இப்போது உள்ள கல்வியானது நடைமுறைக்கு சாத்தியம் இல்லாதது. கல்வி தரத்தை உயர்த்த வேண்டும். மதிப்பெண்ணுக்காக மட்டுமே படிக்கும் நிலைமை மாற வேண்டும். நூலகம் இல்லாத ஊரில்கூட டாஸ்மாக் கடை உள்ளது. நாட்டில் மாற்றத்தை கொண்டு வர வேண்டும் என நடிகர் சூர்யா கூறியுள்ளார்.

Previous «
Next »

In&out Cinema is a Indian digital media company based in Chennai, Tamilnadu. Founded by Francis Markus.B in 2016. In&out Cinema Provides verity of news, videos, reviews, exclusive interviews. on cinema, politics, culture, business, tech. sports around the world in Indian regional language Tamil. We are available in Face Book, Twitter, Instagram, Youtube, Google +, Pinterest and other social media platform.
  • facebook
  • twitter
  • googleplus
  • youtube
  • instagram
  • pinterest
Inandoutcinema Scrolling cinema news