2.0 படத்தை பற்றிய நடிகர் சூர்யாவின் கருத்து – விவரம் உள்ளே

நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் இயக்குனர் சங்கர் இயக்கத்தில் மிகுந்த பொருட்செலவில் உருவாகியுள்ள படம் 2.0. நீண்ட காலங்களாக இந்த படத்திற்காக ரசிகர்கள் காத்திருந்த நிலையில் இந்த படத்தின் வெளியீடு தேதி மற்றும் டீசர் போன்றவை வெளியாகி ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது. இந்த படத்தில் ரஜினிக்கு ஜோடியாக எமி ஜாக்சன் நடித்துள்ளார்.

இவர்களுடன் சுதன்சு பாண்டே, ரியாஸ் கான், கலாபவன் உள்ளிட்ட பல முன்னணி பிரபலங்கள் நடித்துள்ளனர். இந்த படம் இன்று வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த படம் பார்த்த திரைபிரபலன்கள் அனிருத், சிவகார்த்திகேயன், அருண் விஜய், விக்னேஷ் சிவன் உட்பட பலர் நேர்மறையான விமர்சனங்களை கூறிவருகின்றனர். இன்னிலையில் நடிகர் சூர்யா படத்தை பார்ப்பதற்கு முன்னனதாக 2.0 பற்றி ட்விட்டரில் கருத்து கூறியுள்ளார்.

அதில் அவர் கூறியதாவது : மிகப்பெரிய பொழுதுபோக்கை மக்களுக்குத் தரவேண்டும் என்கிற ரஜினி அவர்களின் தீர்மானம் அனைத்துவிதமான எல்லைகளையும் கடந்துவிட்டது. அதை அவ்வளவு எளிதுபோல ரஜினி காட்டுகிறார். ஒரே ஒரு சூப்பர்ஸ்டார் தான். எனக்கு அது ரஜினி தான். நான் எப்போதும் ஷங்கர் அவர்களின் பார்வையைக் கண்டு பிரம்மித்திருக்கிறேன். சினிமாவின் சக்தியை நம்பவைத்துவிடுவார். இசையை நாம் கேட்கும் விதத்தையே ஏ.ஆர்.ரஹ்மான் அவர்கள் மாற்றியமைத்துள்ளார்.

கண்டிப்பா 2.0 நமது காதுகளுக்கு விருந்தாக இருக்கும். லைகா நிறுவனம் இந்தப் படத்துக்காக செய்துள்ள இமாலய முயற்சிகளை நம்பவே முடியவில்லை. கண்டிப்பாக தமிழ் சினிமாவை சர்வதேச தரத்துக்கு எடுத்துச் சென்றுள்ளார்கள். அக்‌ஷய்குமார் அவர்களுக்கு மிகப் பெரிய வரவேற்பு. தமிழில் அவரைப் பார்ப்பது கண்டிப்பா நன்றாக இருக்கும். மிகப்பெரிய வெற்றி பெற வேண்டும் என 2.0 குழுவை வாழ்த்துகிறேன். கண்டிப்பாக 2.0 திரைப்படம் 3டியில் உங்களை மகிழ்விக்கும், ஆச்சரியப்படுத்தும் என நடிகர் சூர்யா கூறியுள்ளார்.

Previous «
Next »

In&out Cinema is a Indian digital media company based in Chennai, Tamilnadu. Founded by Francis Markus.B in 2016. In&out Cinema Provides verity of news, videos, reviews, exclusive interviews. on cinema, politics, culture, business, tech. sports around the world in Indian regional language Tamil. We are available in Face Book, Twitter, Instagram, Youtube, Google +, Pinterest and other social media platform.
  • facebook
  • twitter
  • googleplus
  • youtube
  • instagram
  • pinterest
Inandoutcinema Scrolling cinema news