September 22, 2018
Inandoutcinema - Tamil cinema news

நடிகர் சூரியாவின் 43வது பிறந்தநாள் – டிவிட்டரில் பிரபலங்கள் வாழ்த்து

சென்னை:  நடிகர் சூரியா இன்று தனது 43வது பிரந்தநாளை கொண்டாடுகிறார். இதையடுத்து, அவருக்கு சினிமா பிரபலங்கள் உள்பட பலரும் டிவிட்டரில் வாழ்த்து தெரிவித்து  வருகின்றனர்.

இயக்குனர் செல்வராகவன்: 

இயக்குனர் செல்வராகவன், “சூரியா சார் உங்களுடன் பணியாற்றுவது மகிழ்ச்சியன அனுபவம்” என்று வாழ்த்தியுள்ளார்.

மலையாள நடிகர் மோகன் லால்:

நடிகர் மோகன் லால், நடிகர் சூரியாவை செல்லமாக “ஹாப்பி பர்த்டே டியர்” என்று வாழ்த்தியுள்ளார்.

இயக்குனர் பாண்டியராஜ்:

இயக்குனர் பாண்டிராஜ், ‘கடவுள் உங்களுக்கு நீண்ட வளமான வாழ்கை அளிக்க வாழ்த்துகிறேன் என்று கூறியுள்ளார்.

இயக்குனர் வெங்கட் பிரபு:

இயக்குனர் வெங்கட் பிரபு, ”பிறந்தநாள் வாழ்த்துக்கள் நா” என்று கூறியுள்ளார்.

இயக்குனர் விக்னேஷ் சிவன்

இயக்குனர் விக்னேஷ் சிவன், ‘நீங்கள் ஒரு நிஜ ஹீரோ. நான் உங்களிடம் பணியாற்றிய தருனத்தில் நீங்கள் இந்த சமூகத்துக்காக  ஆற்றியுள்ள பங்களிப்பு தெரிந்து மிகுந்த வியப்படைந்தேன். இது இன்று போல் என்றும் தொடர வேண்டும்” என்று வாழ்த்தியுள்ளார்.

தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு :

டிரீம் வாரியர் பிக்‌சர்ஸ் நிறுவனர் தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு, ஒரு சகோதரனைப்போல “ஹாப்பி பர்த்டே அண்ணா” என்று வாழ்த்தியுள்ளார்.

நடிகை கஸ்தூரி:

நடிகை கஸ்தூரி; ”பணிவு, கடின உழைப்பாளி, மதிப்புக்கூரிய மனிதர்” என்று வாழ்த்தியுள்ளார்.

இதுபோல நடிகர்கள் சத்யராஜ், மனோபாலா, விஷ்னுவிஷால், ராஜசேகரபாண்டியன்,  கேரளா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் உள்ள திரை பிரபலங்களும், சூரியாவின் ரசிகர்களும் அவருக்கு டிவிட்டரில் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், நடிகர் சூரியாவின் பிறந்தநாள் டிவிட்டர் மொமண்ட்ஸ் பக்கத்தில் இடம்பிடித்துள்ளது.

என்ன தான் சூரியாவின் அப்பா சிவகுமார் தமிழ் சினிமாவில் ஒரு பெரிய நடிகர் என்றாலும், அவரது மகனான சூரியா அதை எப்போதுமே தனக்கு ஒரு சிபாரிசாக எடுத்துகொண்டதில்லை. சினிமாவில் பல கட்டங்களை தாண்டி தனது கடின உழைப்பின் காரணமாக இன்று ஓரு வெற்றி பெற்ற நடிகராக சூரியா திகழ்ந்து வருகிறார். சினிமா மட்டுமின்றி சமூகத்துக்கான பொது காரியங்களிலும் அவர் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார். தொடரட்டும் உங்கள் வெற்றி பயணம். பிறந்தநாள் வாழ்த்துக்கள் சூரியா !

Previous «
Next »

In&out Cinema is a Indian digital media company based in Chennai, Tamilnadu. Founded by Francis Markus.B in 2016. In&out Cinema Provides verity of news, videos, reviews, exclusive interviews. on cinema, politics, culture, business, tech. sports around the world in Indian regional language Tamil. We are available in Face Book, Twitter, Instagram, Youtube, Google +, Pinterest and other social media platform.
  • facebook
  • twitter
  • googleplus
  • youtube
  • instagram
  • pinterest
Inandoutcinema Scrolling cinema news