Inandoutcinema - Tamil cinema news

நான் யாரையும் போட்டியாக நினைப்பதில்லை, யாருக்கும் பயப்படுவதில்லை – சிவகார்த்திகேயன்

வருதப்படாத வாலிபர் சங்கம் ரஜினி முருகன் உள்ளிட்ட படங்களை இயக்கிய, இயக்குநர் பொன்ராம் இயக்கத்தில், சிவகார்த்திகேயன் நடிக்கும் படம் சீமராஜா. இந்தப் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகச் சமந்த நடிக்கிறார். அதே போல நெப்போலியன், சிம்ரன், சூரி, யோகிபாபு, மனோபாலா, இயக்குநர் கே.எஸ்.ரவிகுமார் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

இந்த படம் வரும் 13-ம் தேதி திரைக்கு வர உள்ளது. இன்னிலையில் சீமராஜா படத்தின் முன்னோட்ட காணொளி வெளியிட்டு விழா நடைபெற்றது. இதில் படகுழுவினருடன் முன்னணி பிரபலங்கள் பலரும் கலந்துகொண்டனர். இவ்விழாவில் நடிகர் சிவகார்த்திகேயன் பேசியதாவது : இந்த ட்ரெய்லரின் கடைசி 3 ஷாட் பார்த்து சமூக வலைத்தளங்களில் பாகுபலி மாதிரி இருக்கு என பாராட்டுக்கள் இருந்தன.

அது எங்களுக்கு, எங்கள் உழைப்புக்கு கிடைத்த பெருமை. இந்த படத்தை விநாயகர் சதூர்த்திக்கு வெளியிட திட்டமிட்டபோதே இடையில் ஸ்ட்ரைக் வந்தது. அதையும் தாண்டி படத்தை குறித்த தேதிக்கு வெளியிட உழைத்த ஒட்டுமொத்த குழுவுக்கும் பாராட்டுக்கள். படத்தில் நான் ஒரு தமிழ் மன்னராக நடித்திருக்கிறேன்.

அது எனக்கு பெருமையான விஷயம். ரஜினி முருகன் படத்தின்போதே இந்த ஐடியா பற்றி பொன்ராம் சாரும், நானும் பேசினோம். இந்த படத்தில் வரும் ஆக்‌ஷன் காட்சிகள் குழந்தைகளும் பார்க்கும் வகையில் வன்முறை இல்லாமல் செய்திருக்கிறோம். இந்த படத்திலும் காமெடி நிறையவே இருக்கிறது. நான் யாரையும் போட்டியாக நினைப்பதில்லை, யாரை பார்த்தும் பயப்படுவதில்லை, பொறாமையும் கிடையாது, என் அடுத்த கட்டத்தை நோக்கி மட்டுமே பயணிக்கிறேன் என நடிகர் சிவகார்த்திகேயன் கூறியுள்ளார்.

Previous «
Next »

In&out Cinema is a Indian digital media company based in Chennai, Tamilnadu. Founded by Francis Markus.B in 2016. In&out Cinema Provides verity of news, videos, reviews, exclusive interviews. on cinema, politics, culture, business, tech. sports around the world in Indian regional language Tamil. We are available in Face Book, Twitter, Instagram, Youtube, Google +, Pinterest and other social media platform.
  • facebook
  • twitter
  • googleplus
  • youtube
  • instagram
  • pinterest
Inandoutcinema Scrolling cinema news