பிக் பாஸ் பிரபலங்களுடன் நடிகர் சிம்பு. இணையத்தில் வைரலாகும் புகைப்படம் – விவரம் உள்ளே

பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் மஹத், ஜனனி, ரித்விகா, ஐஸ்வர்யா ஆகியோர் பிரபலமடைந்தனர். இந்த நிழச்சியில் ஐஸ்வர்யாவும் ரித்விகாவும் இறுதி வரை சென்று, பின்னர் ரித்விகா வெற்றியாளராக அறிவிக்கப்பட்டார். இவை ஒரு புறம் இருக்க, பிக்பாஸ் முடிந்து எல்லோரும் இயல்பு நிலைக்குத் திரும்பியிருக்கும் நிலையில், ஜனனி நேற்று டிவிட்டரில் சில புகை படங்களைப் பதிவிட்டுள்ளார்.

அதில் நடிகர் சிம்புவுடன் ஜனனி, ரித்விகா, ஐஸ்வர்யா ஆகியோர் நிற்க அவர்களுடன் சிம்புவின் நெருங்கிய நண்பரான மஹத் மற்றும் ஹரீஷும் உடன் நிற்கின்றனர். தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநர்களில் ஒருவராக வளம் வருபவர்தான் இயக்குனர் மணிரத்னம் ஆகும்.

இவரது இயக்கத்தில் நடிகர் அரவிந்த் சாமி, விஜய் சேதுபதி, அருண் விஜய், சிம்பு உட்பட பலர் நடித்து வெளியாகி உள்ள படம்தான் செக்க சிவந்த வானம் ஆகும். இந்த படம் கடந்த வாரம் 27ம் தேதி வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

எல்லோரும் சேர்ந்து செக்கச்சிவந்த வானம் படம் பார்க்கப் போவதைக் குறிப்பிடும் வகையில் நடிகை ஜனனி, இந்த புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாக பரவி வருவது குறிப்பிடத்தக்கது.

 

Previous «
Next »

In&out Cinema is a Indian digital media company based in Chennai, Tamilnadu. Founded by Francis Markus.B in 2016. In&out Cinema Provides verity of news, videos, reviews, exclusive interviews. on cinema, politics, culture, business, tech. sports around the world in Indian regional language Tamil. We are available in Face Book, Twitter, Instagram, Youtube, Google +, Pinterest and other social media platform.
  • facebook
  • twitter
  • googleplus
  • youtube
  • instagram
  • pinterest
Inandoutcinema Scrolling cinema news